நெடு கவிதைகள்

When I think you are watching me close,
My hands and feet tremble, fear exposed.
How can I, with tears that brim and fall,
Call you near with love at all?
My heart stammers, not from lack of care,
But from the weight of heaven’s stare.
You are the peace I long to hold,
But my courage feels too small, too cold.
What if my love feels too flawed to show?
What if silence is safer than letting you know?
Still, beneath the fear, one truth remains true,
Even in trembling, my soul reaches for you.
Yes..I hope you’ll come to make me complete.
நீ என்னைப் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று நினைக்கும் போதே,
என் கை கால்கள் நடுங்கும் – பயம் பசுமையாக வெளிப்படும்.
கண்ணீரால் வழியும் விழிகள் கொண்ட எனது இதயத்தால்,
எப்படி உன்னை நேசத்துடன் அருகில் அழைப்பேன்?
இதயம் திகைப்பது அன்பு இல்லாததால் அல்ல,
வானத்தின் பார்வை சுமக்கும் சுமையின் காரணம்.
நீயே என் ஆன்மா விரும்பும் அமைதி,
ஆனால் என் துணிச்சல் மிகச் சிறியது, குளிர்ந்ததும் கூட.
என் காதல் காட்டத் தகுதியற்றதென நீ நினைத்தால்?
அதைச் சொல்லும் பதிலாக மௌனம் பாதுகாப்பானதென இருந்தால்?
இருந்தாலும், அந்த பயத்துக்குள் ஓர் உண்மை மட்டும் நிலைத்து நிற்கிறது –
நடுங்கும் கணங்களில்கூட, என் உயிர் உன்னைத் தேடுகிறது.
ஆம்… நீ வருவாய் என நம்புகிறேன் — என் முழுமையை பூர்த்தி செய்ய.

On the tangled vines of time,
We swing together –
Clutching the branches of fate
With hands full of hope.
Our hearts,
Sometimes in you, sometimes in me –
Leap and tire, again and again.
In unknown ways,
And unspoken languages,
We built our little world, just us two.
On this wild jungle path called life,
In childlike wonder,
Our love still grows sky-high.
I didn’t plan to find you,
But even after a hundred million years,
I’ll still choose your name…
My monkey mate!!
காலத்தின் சிக்கலான கொடியில்,
நாம் இருவரும் ஊசலாடுகிறோம் —
விதியின் மரத்தண்டுகளை நம்பிக்கையால் பற்றிக்கொண்டு,
உயர முயற்சிக்கிறோம் நாள்தோறும்.
நம் இதயங்கள்,
சில நேரம் உன்னுள், சில நேரம் என்னுள் —
தாவித் தாவி சோர்ந்து விடுகின்றன.
நமக்குப் புரியாத வழிகளிலும்,
தெரியாத மொழிகளிலும்
நம் சிறிய உலகத்தை அமைத்து வைத்தோம் நாமே.
வாழ்க்கை என்னும் காட்டுப் பாதையில்,
வயதறியாமலே வானளவிற்கு
நம் காதலை வளர்த்துக் கொண்டே இருக்கிறோம்.
திட்டமிடாமல் தான் நான் உன்னை கண்டேன்,
ஆனால் இன்னும் நூறு மில்லியன் ஆண்டுகள் சென்றாலும்,
உன் பெயரையே தேர்வு செய்வேன்…
என் ஜோடி குரங்கே!

I cried to God
to make my life bloom…
But HE is always busy, probably stuck in Zoom.
I sent HIM my vibrant, heartfelt message,
but HE is locked in Do Not Disturb mode,
celestially unavailable.
I opened the chatbox, hoping for grace,
but HE lives in the sky
So my message never flew, never reached HIS space.
With love, I called HIM
to drop me a text from the clouds,
but like a meteor, it vanished,
burnt out before crossing the ozone aloud.
Yes, HE is my God…
and also my boyfriend,
a statue carved from ancient stone,
eternally still,
gloriously silent.
And so,
my drama begins
with no hero’s entry.
Just me,
writing the script alone.
நான் இறைவனிடம் கதறினேன், என் வாழ்வு மலர வேண்டுமென்று. ஆனால் அவரோ எப்பொழுதும் வேலையில் மூழ்கி இருக்கிறார்… ஒருவேளை ஜூம் மீட்டிங்கில் மாட்டிக்கொண்டாரோ என்னவோ.
என் துடிப்பான, இதயப்பூர்வமான செய்தியை அனுப்பினேன், ஆனால் அவரோ Do Not Disturb முறையில் பூட்டப்பட்டிருக்கிறார்.
வானுலகில் கிடைக்கவில்லை. அருளுக்காகக் காத்திருந்து, உரையாடல் பெட்டியைத் திறந்தேன், ஆனால் அவரோ வானத்தில் வசிக்கிறார். அதனால் என் செய்தி பறக்கவில்லை, அவரது இடத்தை அடையவில்லை.
அன்புடன், அவரை அழைத்தேன், மேகங்களிலிருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பும்படி, ஆனால் அது ஒரு விண்கல் போல மறைந்தது. ஓசோன் படலத்தைக் கடப்பதற்கு முன்பே எரிந்து சாம்பலானது.
ஆமாம், அவர்தான் என் கடவுள்… அவரே என் காதலனும் கூட.. பழங்கால கல்லில் செதுக்கப்பட்ட ஒரு சிலை, என்றென்றும் அசையாமல், மகிமையுடன் மௌனமாக.
ஆக, என் நாடகம் தொடங்குகிறது – எந்த வீரரின் வருகையுமின்றி. நானும், திரைக்கதையை மட்டும் தனியாக எழுதுகிறேன்.

I am unwell, the stars know it well..
Their light fading in your memory.
Even the heavy silence around me sings a silent raga for you.
I laugh outwardly, to conceal the sorrow within my heart, but it rings lighter than a frail leaf.
Without you, my soul coils and writhes like a shed snakeskin, in empty air devoid of even a drop of life.
I need your voice,
I need your touch,
I need your radiance.
I need you, a magician, to correct the errors of my solitude.
நான் நலமில்லை , நட்சத்திரங்களுக்கு அது நன்றாகவே தெரியும்,
உன் நினைவில் மங்குகின்றன அவற்றின் ஒளியும்.
என்னை சுற்றியிருக்கும் கனத்த அமைதி கூட உனக்கென ஒரு மௌன ராகம் பாடும்.
நான் வெளியில் சிரிக்கிறேன், இதயத்தின் உள் சோகத்தை மறைக்க
ஆனால் அது மெல்லிய சருகை விட இலகுவாய் ஒலிக்கிறது.
நீ இன்றி என் ஆன்மா உரித்த பாம்புச்சட்டை போல் சுருண்டு புரண்டு கொண்டிருக்கிறது, ஒரு துளி ஜீவன் இல்லாத வெற்றுக் காற்றில்..
உன் குரல் தேவை
உன் தொடுதல் தேவை
உன் பிரகாசம் தேவை.
என் தனிமையின் தவறுகளைத் திருத்த ஒரு மாயாவி நீ தேவை..

பேபி.. Geometri பாக்ஸ் -ல் போலி பல் செட் வைக்க இடம் இருக்கிறதா என்று நான் பார்க்க விரும்புகிறேன்..
ஆமாம்… ஒவ்வொரு நாளும் உன்னிடமிருந்து எனக்கு ஒரு அணைப்பும், முத்தமும் கிடைத்தால், நான் முதிய தலைமுறை இடைவெளி கற்றல் மையத்தில் என் இறுதிக் காலம் வரை படிக்க விரும்புவேன்.
ஆனால் இப்போது எனது கவலை என்னவென்றால்…. கூன் முதுகு கட்டிப்பிடிக்கும்போது ஏதேனும் பிரச்சினையை ஏற்படுத்துமா?

பூங்கொத்து இல்லை, சாக்லெட் இல்லை, அணைப்பு இல்லை, கவிதை இல்லை, வியப்பில் ஆழ்த்தவில்லை, பரிசுகள் இல்லை, முத்தம் இல்லை, அன்பு கடிதம் இல்லை, சமாதானப் பேச்சு இல்லை.
மேலே பட்டியலிடப்பட்ட எந்த ஒரு தந்திரத்தையும் நீங்கள் என்னை சமாதானப்படுத்த பயன்படுத்தவில்லை.
நீ நமக்கான ஒரு பாடலை இசைத்து என்னை உங்கள் புன்னகையால் மகிழ்வித்தீர்கள்.
ஆம்..என் புத்திசாலி நரிக்குட்டி என்னை எளிதாக அமைதிப்படுத்துவது எப்படி என்பதை தெரிந்துகொண்டது.

I see my world in the cupped hands of yours.
It may not have stars, but you are my moon.
It may not have treasures, but you are a heap of flowers.
It may not have a luxurious palace, but you are a pile of cotton for me to rest my head.
Isn’t it enough, a gaze that keeps me close,
your care that soothes my deepest fears, for my entire world to function?
உன்னுடைய கரங்களின் கை குவிப்பில் என் உலகத்தைக் காண்கிறேன்.
அந்த உலகத்தில் நட்சத்திரங்கள் இல்லை தான். ஆனால் நிலவாக நீ இருக்கிறாயே..
பொக்கிஷங்கள் இல்லை தான். பூக்களின் குவியலாக நீ இருக்கிறாயே..
ஆடம்பரமான அரண்மனை இல்லை தான். தலை சாய்க்க பஞ்சுக் குவியலாய் நீ இருக்கிறாயே..
என்னை அருகிலேயே வைத்திருக்கும் ஒரு பார்வை,
என் ஆழ்ந்த பயத்தை தணிக்கும் உன் கவனிப்பு ,இது போதாதா என் மொத்த உலகம் இயங்க..

என்னுள் எங்கும் வியாபித்திருக்கும் நீ, மூக்கு நுனியை மட்டும் வெற்றிடமாய் விட்டு விட்டாயோ?
உன்னைக் காணாத போதெல்லாம், உடல் முழுக்க காதல் , கண்களில் தேடல்..
ஆனால் மூக்கு நுனியில் ஏறி நிற்கிறது கோபம்..
நீ விட்ட வெற்றிடத்தை, இருப்பிடமாய்க் கொண்டு..
அடுத்த சந்திப்பில் அதையும் உன் காதலால் நிரப்பி விடு..
ஏனெனில் மூக்கின் நுனி அளவுக்கு கூட உன் மேல் கோபம் வருவதை என் இதயம் விரும்பவில்லை.

காக்கும் கடவுள் உண்டு..
அழிக்கும் கடவுள் உண்டு..
காதலர்களைப் பிரிக்கும் கடவுள் என்ற ஒன்று இருக்கிறதா?
இருக்கிறது.. இப்போதுதான் தெரிகிறது..
கடவுள்களில் கூடவா நல்ல கடவுள், கெட்ட கடவுள் என்ற வகையறா இருக்கிறது?
இருக்கிறது.. இப்போதுதான் தெரிகிறது..
சாபம் விடுகிறேன் நம்மைப் பிரித்த கடவுளுக்கு..
கனவில் என் முகத்தை க்ளோஸ்அப்-பில் கண்டு, பாம்புப் படுக்கையிலிருந்து நழுவி கீழே விழட்டும்..
பலிக்கட்டும் ஒரு நாத்திகையின் சாபம்..

உன்னைப் பற்றிய கவலையின் நிழலில் என் இதயம் இருண்டு சுருங்குகிறது.
உன் சிரிப்பொலியைக் கேட்க முடியாமல் என் கண்களில் ஒளி மங்குகிறது.
மெதுவாகச் சுழலும் கடிகாரத்தின் ஒவ்வொரு நொடியும் என் மன அமைதியைக் குலைக்கிறது.
இந்த பாரமான சுமையை தாங்க முடியாமல் என் சுவாசம் திணறுகிறது.
வழிகாட்டி இல்லாமல், இந்த தனிமையான பாதையில் நான் விழுந்து மனமுடைந்து கிடக்கிறேன்.
உதவியற்றவர்களுக்கு கடவுள் உதவுகிறார் என்பது உண்மையென்றால், கடவுள் உதவிக்கரம் நீட்டுவாரா?
உனக்காக நான் அவர் மீது நம்பிக்கை வைக்கிறேன்.
ஆம்… உனக்காக நான் கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் போல் தெரிகிறது.

மருத்துவ உலகம் கூறுவது என்னவென்றால், இரண்டாவது மாரடைப்பு மோசமானது, மேலும் அது உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று..
ஆனால் உன் கண்கள் என் கண்களின் மீது மோதும் ஒவ்வொரு வினாடியும் ஒரு மாரடைப்பை எனக்கு நீ ஏற்படுத்துகிறாய்.
அதே கண்கள் வழியாக மின்சார அதிர்ச்சியை அனுப்பி முதலுதவியும் அளிக்கிறாய்.
நீ ஒரு தேவதூத மருத்துவனா? அல்லது தீய மருத்துவனா?
நீ என்னை காப்பாற்ற முயல்கிறாயா? அல்லது கொல்ல முயல்கிறாயா?

பொங்கல் பண்டிகையின்போது புதிய வேட்டி, சட்டை அணிந்து உன் வாட்ஸ்அப் பிரொஃபைல் படத்தைப் போடாதே.
அப்படிப் போட்டால், தீபாவளி வந்துவிட்டதாக மக்கள் தவறாக நினைத்துவிடுவார்கள்.
ஏனென்றால், உங்கள் டிபி-யைப் பார்த்ததும் நான் அதிக மகிழ்ச்சியுடன் பட்டாசுகளை வெடிப்பேன்.
ஆகவே, பண்டிகைக் குழப்பத்தைத் தவிர்க்க, உன் படத்தை சிறந்த சந்தர்ப்பத்திற்கு வைத்திரு.
தீபாவளியன்று உன் புகைப்படத்தை பதிவேற்று. என்னைப் போலவே பட்டாசுப் பொறிகள் பறக்கட்டும்!

மரண வேதனை என்பது வெறும் உடல் வலியில் மட்டுமா இருக்கிறது?
நாம் பகிர்ந்து கொண்ட எதையும் யாரிடமும் பகிர முடியாத ஒரு வேதனை..
கண்களால் புரிந்து கொண்ட சில விஷயங்களை நம் கண்களுக்குள்ளேயே அடக்கம் செய்தாக வேண்டிய ஒரு வேதனை..
நம் இருவரின் சில செயல்கள் சில சமயங்கள் காதலுக்கே சந்தேகம் வரும் அளவுக்கு நடித்தாக வேண்டிய ஒரு வேதனை.
மூச்சு சத்தம் கேட்கும் தூரத்தில் இருந்தும் முழு நிலவுக்கு தறித் துணியை போர்த்தி மறைப்பது போல முகம் காட்ட முடியாத ஒரு வேதனை.
இதை விடவா மரண வேதனை என்ற ஒன்று இருக்கப் போகிறது?

ஒரே ஒரு இரவு வேண்டும்.
அமைதியாய், நிதானமாய் உன்னருகில் அமர்ந்து உன்னை ரசிப்பதற்கு ஒரே ஒரு இரவு வேண்டும்.
நம்மை விட்டு தனித்து நின்று நாம் இருவரின் தனிமையும் காதல் கொள்ள ஒரே ஒரு இரவு வேண்டும்.
கண்ணீரும், வலியும் கையில் வழிந்து ஒழுகும் காற்றைப் போல் காணாமல் போக ஒரே ஒரு இரவு வேண்டும்.
என் அதிகப்படியான காதலை உன்னுள் இறக்கி வைத்து, உன் சுவாசம் ஏறி இறங்கும் அழகை என்னுள் ஏற்றிக் கொண்டு சொர்க்கத்துக்கு பயணப்படும் முன்,
ஒரே ஒரு இரவு வேண்டும், உன்னோடு..

உன் விரல் நுனியின் ஸ்பரிசத்தில் ஆயுள் முழுவதும் தோற்றுக் கொண்டேயிருக்க ஒரு வரம் வேண்டும்.
எக்காலத்துக்கும் உன்னை சுற்றி வந்து கொண்டேயிருக்க என் ஆன்மாவில் உனது பெயரை எழுதி வைக்க உன் அனுமதி வேண்டும்.
என் கடந்த கால காயங்களை கழுவி மருந்திட, உன் கண்ணீரின் ஒரு துளி வேண்டும்.
என் சோகமான தருணங்களின் நிமிடங்களை நொடிகளாய் மாற்றிடவும்,
நான் புன்னகைக்கும் தருணங்களின் நொடிகளை மணிக்கணக்காய் மாற்றிடவும் நீ வேண்டும் எனக்கு.

எழுதப்படாத நம் காதல் கதையின் தொடக்கத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு கதைக்கும் கண்டிப்பாய் ஒரு முடிவு உண்டுதான். முடிவு தெரிந்து விட்டால் சுவாரஸ்யம் இல்லை தான் எந்த ஒரு கதையும்.
அதற்காக முதல் வரியே இல்லாத வெற்றுத் தாளையே எவ்வளவு காலம் தான் வெறித்துக் கொண்டு பார்த்து உட்கார்ந்திருப்பேன்?
எனது நம்பிக்கை கிராமத்து கடைசி பேருத்தில் ஏறி என்னையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறது.
முடிவு எப்படியோ இருக்கட்டும். முதலில் பிள்ளையார் சுழியாவது வை, நம் காதல் கதையின் முதல் அத்தியாயத்திற்கு.

பள்ளிப்பருவத்தில் எவ்வளவு முட்டாளாய் இருந்திருக்கிறேன்.
உலகம் உருண்டையானது என்றார்கள். இல்லை பாதாம் கொட்டை வடிவம் என்று இப்போது புரிந்தது.
உலகத்தின் மேற்பரப்பு 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் என்றார்கள். இல்லை, ஒரு இன்ச் தான் அதன் மொத்த பரப்பளவு என இப்போது புரிந்தது.
நீலமும் பச்சையும் கலந்த வரைபடத்தை உலகம் என்று காட்டினார்கள். ஆனால் கருப்பும் வெள்ளையும் கலந்தது தான் என் உலகம் என்று இப்போது புரிந்தது.
உலகம் தன்னைத்தானே சுற்றி வரும் என்று சொன்னார்கள். ஆனால் இங்கு என் உலகத்தை நான் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறேன், உன் இமைகளின் இடைஞ்சல் இருந்தும்..

What kind of thief are you?
You are walking around like a king after stealing something that isn’t worth even ten paise, instead of stealing valuable items that are high in worth.
You wish to change your nighttime stealing habits and steal 24/7.
You think about stealing the same thing again and again, once you have already stolen it.
Even knowing that you are the thief, I have no heart to ask for it back from you. Because you are the one who has stolen my heart.
Keep it yourself, my heart thief..
என்ன திருடன் நீ?
விலை உயர்ந்த மதிப்பு மிக்க பொருள்களை திருடுவதை விட்டு விட்டு, பத்து காசுக்கு கூட விலைக்குப் போகாத ஒன்றைத் திருடி விட்டு ஒரு மன்னன் போல வலம் வருகிறாய்.
இரவு நேரத்தில் திருடும் விதியை மாற்றி இருபத்து நான்கு மணி நேரமும் திருடிக் கொண்டேயிருக்க வேண்டும் என ஆசைப்படுகிறாய்.
ஒரு தடவை திருடி விட்ட ஒரு பொருளையே மீண்டும் மீண்டும் திருட நினைக்கிறாய்.
நீதான் திருடினாய் என்று தெரிந்தும் உன்னிடம் திருப்பிக் கேட்க எனக்கு மனமில்லை. ஏனெனில் நீதான் அதை திருடி விட்டாயே.
நீயே வைத்துக் கொள், என் இதயத் திருடனே..

I’ve tied my six-foot-tall teddy bear inside my half-foot heart.
Yes, You only..
Every day I am passing the days, because I don’t want to crush the lump of cheese that was dumped in the dark shadow of my heart.
Yes, I want the ladder…
In order to see your bright button eyes at the top of the tower, I need some power.
Yeah.. I’ve been waiting for years to taste my cheesecake.
Because you are the one who keeps me from being hungry.
Please honey..Never leak out from my heart… calm me down with your comforting embrace always..
என் அரையடி இதயத்தில் கட்டிப் போட்டு வைத்திருக்கிறேன், ஆறு அடி உயர என் teddy bear -ரை.
இதயத்தின் இருட்டு நிழலில் கொட்டி வைத்த பாலாடைக் கட்டி போல இருக்கும் உன்னை கசக்கிப் பிழிய மனமில்லாமல் ஒவ்வொரு நாளையும் கடத்திச் செல்கிறேன்.
ஆம், ஏணி தான் வேண்டும்..Tower -ரின் உச்சியில் இருக்கும் உன் பிரகாசமான பொத்தான் கண்களைப் பார்ப்பதற்கே எனக்கு Power வேண்டும்.
வருடக் கணக்கில் பசியோடு காத்திருக்கிறேன், என்னை cheer செய்யும் cheese pack கை சுவைப்பதற்காக.
பசியில்லா நேரத்தில் என்னைக் கை விட்டு விடாதே. ஆறுதல் அளிக்கும் உன் அரவணைப்பால் என் காதலைக் கசிந்துருக செய், என் இதயத்திலிருந்து..

They say there are parallel universes, copies of you and me, beyond Earth.
I don’t want to search for a lover like you in another universe.
I met you, my right person, in this universe, but at the wrong time. Still, it doesn’t matter.
You alone are enough until my death.
All my poems, poured from my soul, find their completeness only by writing about you.
Our future should be filled with our love, our closeness.
I long to share half my years with you.
Heaven and parallel universes are not guaranteed.
I only have this one chance, in this one universe.
My love, I want our lives, our love, to end in this lifetime itself..
உன்னைப் போல, என்னைப் போல பிரதிகள் நடமாடும் ஒரு பிரபஞ்சம் உள்ளதாமே, பூமிக்கு அப்பால்..
நான் உன்னைப் போன்ற ஒரு காதலனை வேறொரு பிரபஞ்சத்தில் தேடிக் கண்டுபிடிக்க விரும்பவில்லை. என் சரியான நபராகிய உன்னை இந்த பிரபஞ்சத்தில் தான் சந்தித்தேன், ஆனால் தவறான நேரத்தில்.
இருந்தாலும் பரவாயில்லை. நீ ஒருவனே என் மரணம் வரைக்கும் போதும். என் ஆன்மாவை ஊற்றி எழுதும் என் அத்துணை கவிதைகளும் உன்னைப் பற்றி எழுதுவதாலேயே முழுமை பெறுகின்றன.
நம் எதிர்காலம் நம் காதலால், நம் நெருக்கத்தால் நிரப்பப்பட வேண்டும். என் ஆண்டுகளில் சரி பாதியை உன்னுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
சொர்க்கம் மற்றும் இணையான பிரபஞ்சங்கள் உறுதியளிக்கப்படவில்லை. எனக்கு இந்த ஒரு வாய்ப்பு இந்த ஒரு பிரபஞ்சத்தில் மட்டுமே உள்ளது. என் அன்பே, இந்த வாழ்நாளில் நாமும், நாம் காதலும் முடிவடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

Dear my LOVE GURU,
You are not being a part of my life. Because you are my life.
The real magic is happening in every STAGE of my life because of you.
You are my cup of coffee, slightly bitter, but incredibly necessary..
I might test your patience, but you always challenge my creativity.
I am sorry for irritating you most of the time. I promise to try to do more next year.
May be I am a kid, but you are the only adult tenant in my room of heart, forever.
அன்புள்ள என் குருவே, நீங்கள் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லை. ஏனென்றால் நீதான் என் வாழ்க்கை .
உன்னால் தான் என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உண்மையான மந்திரம் நடக்கிறது.
நீங்கள் என் கப் காபி, சற்று கசப்பானது, ஆனால் நம்பமுடியாத அளவிற்கு அவசியம்..
நான் உங்கள் பொறுமையை சோதிக்கலாம், ஆனால் நீங்கள் எப்போதும் என் படைப்பாற்றலுக்கு சவால் விடுகிறீர்கள்.
உங்களை அடிக்கடி எரிச்சலூட்டியதற்காக வருந்துகிறேன். அடுத்த ஆண்டு இன்னும் பலவற்றைச் செய்ய முயற்சிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
ஒருவேளை நான் ஒரு குழந்தையாக இருக்கலாம், ஆனால் என் இதய அறையில் நீங்கள் மட்டுமே வயதுவந்த வாடகைதாரர்.

My eager eyes love to see the blooming flower.
My thirsty heart yearns to softly touch its petals.
My agitated lungs long to breathe its fragrance.
But how can I open up that flower’s heart, guarded by a fence?
I know words alone cannot suffice,
Action must be taken to dance with the flower…
I am looking for the key to enter there.
I will find the way one day,
but not by force, but by grace.
Let me be part of cherishing that
nestled, safe space…
அன்றலர்ந்த மலர் போல் இருக்கும் உன்னைப் பார்க்க என் ஆவலுடைய கண்கள் விரும்புகின்றன.
என் தாகம் நிறைந்த இதயம் உன் இதழ்களை மென்மையாகத் தொட ஏங்குகிறது.
என் கிளர்ந்தெழுந்த நுரையீரல் உன் நறுமணத்தை சுவாசிக்க ஏங்குகிறது.
ஆனால் வேலியால் பாதுகாக்கப்பட்ட மலராகிய உன் இதயத்தை நான் எப்படி திறப்பது?
வார்த்தைகள் மட்டும் போதாது என்று எனக்குத் தெரியும்.
பூவோடு நடனமாட நான் ஏதும் செய்யத்தான் வேண்டும்…
அங்கே நுழைவதற்கான சாவியைத் தேடும் முயற்சியில் ஒரு நாள் வெற்றி கிடைக்கும்.
ஆனால் பலத்தால் அல்ல, ஆனால் கருணையால்.
உன் இதயக் கூட்டில் நானும் ஒரு ஓரமாய் இருக்க அனுமதி கொடு. அதைத் தவிர வேறு பாதுகாப்பான இடம் ஏது எனக்கு?


The moment we meet, our brains will get drowned into love hormones and will dissolve.
The oxygen that should be inhaled will behave stubbornly, refusing to go inside and staying to watch us in the gap between our chests.
The circular lens of the eye will transform into a heart-shaped amoeba, and it will show everything out of focus, except the two of us..
All the creatures in the world will see the closeness between us, and they will change as the Communist Party color.
Words that are worked between us for our love now, will lead to a loss of employment.
Then.. the mouth is used to make mere words only, at the moment we meet?
நாம் இருவர் சந்திக்கும் அந்த நொடி, நம் மூளை காதல் ஹோர்மோனில் அமிழ்ந்து கரைந்து போகும்..
உள்ளிழுக்கப் பட வேண்டிய oxygen செல்ல மாட்டேன் என அடம்பிடித்து நம் இருவர் நெஞ்சுக்கிடையே வாய் பிளந்து வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கும்..
கண்களின் வட்ட லென்சும் இதய வடிவ அமீபாவாய் உருமாறி, நம் இருவரைத் தவிர அனைத்தையும் out of focus-ல் காட்டும்.
உலகில் உள்ள அத்தனை உயிரினங்களும் நம் இருவர் நெருக்கத்தை கண்டு கம்யூனிஸ்ட் கட்சி கலருக்கு கட்சித் தாவலை மேற்கொள்ளும்..
நம் காதலுக்காக நமக்கிடையே இப்போது வேலை பார்த்து வரும் வார்த்தைகள் எல்லாம் வேலை வாய்ப்பை இழந்து நிற்கும்.
பின்னே.. வாய் என்பது வார்த்தைகளை உருவாக்க மட்டும்தான் பயன்படுகிறதா என்ன?

மீன் இனத்தில் ஒரு வகை உண்டாம்..
எப்போதும் தன் ஜோடியுடனேயே
நீந்திக் கொண்டு திரியுமாம்.
எப்போதாவது ஒரு சிறு கல் குறுக்கீட்டால்
அவ்விரண்டும் சிறு நொடிகள் பிரிய நேர்ந்தாலும்,
அவ்விரண்டில் ஒன்று அந்த பிரிவுத் துயர்
தாங்காது இதயம் உடைந்து
இறந்து விடுமாம்..
காதலிக்கும் அனைவர்க்கும்
பிரிவின் வலி புரியும்.. உன்னைத் தவிர..
காதல் நதியில் மணிக்கு 10 லட்சம் K.M.
வேகத்தில் செல்லும் sail fish நான்..
நகரவே அடம்பிடித்து 0 K.M.
வேகத்திலேயே தவழ்ந்து கொண்டிருக்கிற seahorse நீ..
இதில் எங்கு இணைவது? பின் பிரிவது?
There is a type of fish in this world,
Always swims with a partner.
If occasionally a small stone interferes, they have to be left alone for a while,
But One of them could not bear that loneliness even for a few seconds and will die.
For all who love,
understand the pain of separation.. except you.
In the river of love
I am a sail fish who swims at 10 million km/hour.
You are the seahorse crawling at speed of 0 km/hour..
In this, where to join? then, when to part?

என் போர்வை முழுக்க உன் நெடி,
என் உயிரோடு நீ கலந்த அந்த நொடியிலிருந்து..
நம் போர்வை வீட்டுக்குள்
உன் இதழ்ப் பேனாவால்,
என் இதழ்க் காகிதத்தில் வரைந்த கடிதங்கள் ஆயிரம்..
ஆனால் பதில் மடல் தருமுன்பே
படிக்காமல் ஏனடா மறைந்தாய்?
கலவி கொண்ட உயிர்மெய் எழுத்தை ஏந்தி,
காற்றில் படபடத்துக் கொண்டேயிருக்கிறது
என் இதழ்க் காகிதம்!!!
From the moment you mingled in my soul,
your sweet fragrance was all over my blanket.
Inside our blanket house,
a thousand letters were drawn
by your lip pen
on my lip paper.
But before I give you the reply letter,
why did you disappear without reading?
Bearing the intercourse words of vowel and consonant letters,
My lip paper flutters in the air to search you!!!

வேண்டுகோள் வந்தது
குழந்தையை வர்ணித்து
சில வரிகள் எழுதுமாறு..
கண் மூடி – என்
கற்பனைக் குதிரையை
ஓட விட்டேன்
கால் குளம்புகளில்
மசியோடு…
ஐந்து கிலோ பூ மொட்டினை
ஒத்தது அன்றோ அதன்
மொத்த உருவம்..
கருப்புக்கு வெள்ளை முரண்பாடு தான்
ஆனால் பெரும்பாடாகும்,
மின்னும் கண்களிலிருந்து
நம் பார்வையை விலக்க…
அமிர்தத்தின் ஊற்று என்பதால்
எந்நேரமும் ஈரப் பசையுடன் காட்சியளிக்கும்
ரோஜாப் பட்டு இதழ்கள்…
நிற்க..
அது என்ன?
இதழ்களின் மேல்
இருக்கையிட்டு அமர்ந்திருக்கிறது
மீசை???
ச்சை…
குழந்தை முகத்திலுமா
உன் முகத்தைத் தேடுகிறது,
என் குரங்கு மனது!!!!
A request came to write some lines about the beauty of a Baby.
I closed my eyes and ran an imaginary horse in my mind with ink on its hooves.
The total weight of that baby is like five kilos of a flower bud, isn’t it?
Black is the opposite of white. But mostly it’s hard to avert our gaze from that glittering eyes.
As a fountain of nectar, the lips always appear moist rose Petals…
Wait wait..
what is that? a mustache seated above the lips?
Oh my gosh!
My monkey mind searches for your face in that Baby’s face?

சிறு பிரிவுக்குப் பின் குறு நகையுடன் உன் உரு தோன்றும் சமயங்களில்
ஒப்பாரி வைக்கிறேன் என்று எண்ணாதேடா…
அது கண்ணீர் அல்ல.
கட்டுக்கடங்காத காதல் அலை நீர் உடல் முழுதும் நிரம்பி பொங்கி வழிகிறது,
என் கண்களின் வழியே..
இமைப் படி தாண்டி வழியும் கண் நீரால் நனைந்த என் இதழைத் துவட்டி விடத்தான்
உன் இதழ் “துண்டு” இருக்கிறதே..
உறிஞ்சி எடுத்து விடு, என் இதழ்களின் ஈரத்தை..
After a couple of days apart, At time when I see your appearance,
Don’t think that I’ve started to cry.
It’s not tears.
Unbridled love is like a wave of water overflowing through my eyes..
My lips get wet, Because of tears that flowing from my eyelids..
You know..I can’t stand the cold..
With your “towe-L-ips” Just wipe off and absorb the wetness of my lips..
Because you know..I can’t stand the cold.

நம் இருவர் சந்திப்பில்
மெய் மறந்த என் கண் வண்டுகள்
மொய்க்கிறது உன் பூ முகத்தை…
ஒட்டு மொத்த இரத்தமும் ஒரு புள்ளியில் கும்மாளமிட
சிவந்து கனிகிறது என் கன்னக் குழிகள் …
என் மூச்சுக் காற்றின் சூட்டில் வெந்த இதழ்கள்,
நெகிழ்ந்து நெளிகிறது ஏக்கத்தில்…
உன் உருவம் சென்று விட்டது எப்போதோ…
ஆனாலும் என் மடியில் நீ!! அருகில் மயக்கத்தில் நான்!!
தெளிந்த பிறகுதான் தெரிகிறது,
என் மாய லோகக் கண்ணன் நீ என்று…
Whenever you come to meet me,
your beetle eyes sweep my flower face..
At that time my whole blood begins to jump into a spot at
My cheeks dimple, which turns red and ripe…
Due to the warmth of our breath, my heated lips are flexing and writhing in longing…
Your figure is in my lap !!
I was almost unconscious !!
Seen only after it clears, you never came to see me, always…
Then only I understand that you are My Krishna of mystic world…

ஒரு நிமிடத்தில் சொல்லி விட்டேன் உன் மீதான காதலை..
ஆனால் அதை நிரூபிக்கத்தான் ஒரு ஜென்மமே வேண்டியதாய் இருக்கிறது..
ஆயுளைப் புதுப்பிக்கும் அரசு அலுவலகம் ஏதும் அருகில் உள்ளதா?
இன்னுமொரு ஜென்மம் வேண்டும் எனக்கு..
In a minute
I told you
My Love for you..
But
Just to prove it
A birth
It is necessary..
Any government office
Is it nearby to rejuvenate my life?
I want another life to prove my LOVE..

நேற்று தான் நான் உணர்ந்தேன், நீ ஒரு மனிதனல்ல என்று !!
ஏனெனில் ஆக்ஸிஜனை உள்ளிழுத்து
கார்பன்-டை-ஆக்சைடை வெளிவிடுகிறார்களாம் மனிதர்கள்..
நீ விட்ட மூச்சுக் காற்றில் நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனில் நீ ஒரு மனிதன் இல்லை அல்லவே?
உன் சுவாசக் காற்று சுழன்றடிக்கும் திசையிலே என் வாழ்வின் மொத்தப் பாதையும் பயணிக்கிறது இடம், வலம் என எத்திசையும் இல்லாது..
Just realized yesterday, You are not a man!!
Because humans Inhale oxygen and exhale Carbon-dioxide
In the breath you release If I’m alive
You’re not a man, are you?
The whole path of my life There is no purpose in my life travelling,
No north or south.. I am the direction according to your breathing cycle

நிலவுக்கு புவியீர்ப்பு விசை குறைவு என்று யார் சொன்னது?
பூமியின் இருதயத்தில் புதைக்கப்பட்ட வைரத்தையும் இழுக்கும் அளவிற்கு வல்லமை உண்டு..
வைரப் பெண்ணும் நிலவு ஆண்மகனின் தழுவுதலை வேண்டி ஆவலோடுதான் அதைக் காண மேலெழும்பி வருகிறது..
ஆனால் நிலவைச் சுற்றிலும் கணக்கிலடங்கா நட்சத்திரங்கள் இருக்கையில்
ஒற்றை வைரம் விழி பிதுங்கி நிற்பதை தவிர வேறென்ன செய்ய முடியும்?
தன் வெண்மேனியை உருக்கி மேகப் படுக்கையாய் மாறி மிதந்து கொண்டே காத்துக் கிடக்கிறது,
வேண்டிய பொழுது நிலவுக்கு இதமாய் வெப்பம் கொடுக்கவும், விழாமல் தாங்கி பிடிக்கவும்..
Who said the moon has a low gravity force?
With his unseen supreme force, he only pulls out the hidden diamond, which lies in the heart of Mother Earth, to stay with him.
Diamond Girl also wants to embrace the Moon Man. So, she found a way to reach him from her shed.
But she was stunned by seeing so many stars around the moon that were so bright and favourites to him. So she retreated midway, started to melt, and changed into a cloud bed to hold the moon whenever he needed warmth or fell from the sky.
What else can that pity diamond do?
Leave a Reply