நெடு கவிதைகள்

என் இதயக் குடுவைக்குள்

உன்னை இட்டு விட்டேன்,

 

விளிம்பு வழி ஏற முயற்சிக்காதே – என்

விழி நீர் வழிந்து  கொண்டேயிருப்பதால்

வழுக்கி விழுவாய்.. – என்

இதயக் கடல் தாண்டி கரை ஏற முயலாதே

என் உயிர் கரைந்து விடும் நிரந்தரமாய்…

 

கதிர் ஒளி பாயும் உன் கண்களை

வெளி உலகிற்காய்  திறக்காதே

சதிராடும் என் இதயத்திற்கு

விடியாத இரவாகி விடும்..

 

வேறு என்ன செய்ய என யோசிக்காதே… (அ) காதல் cork கொண்டு

இறுக அடைத்த என் இதயக் கூட்டுக்குள்

அடைந்து கொண்டு அடை காத்துக் கொண்டேயிரு – என்

உயிர்க் கருவை, வாழ்நாள் முழுவதுமாக…

5/5

என் போர்வை முழுக்க உன் நெடி,

உயிரோடு கலந்த அந்த நொடியிலிருந்து..

 

நம் போர்வை வீட்டுக்குள்

உன் இதழ்ப் பேனாவால்

என் இதழ்க் காகிதத்தில்

வரைந்த கடிதங்கள் ஆயிரம்..

 

ஆனால் பதில் மடல் தருமுன்பே

படிக்காமல் ஏனடா மறைந்தாய்?

 

கலவி கொண்ட உயிர்மெய் எழுத்தை ஏந்தி

காற்றில் படபடத்துக் கொண்டேயிருக்கிறது

என் இதழ்க் காகிதம்!!!

 

 

5/5

ஒரு நிமிடத்தில்

சொல்லி விட்டேன்

உன் மீதான காதலை..

 

ஆனால்

அதை நிரூபிக்கத்தான்

ஒரு ஜென்மமே

வேண்டியதாய் இருக்கிறது..

 

ஆயுளைப்  புதுப்பிக்கும்

அரசு அலுவலகம் ஏதும்

அருகில் உள்ளதா?

இன்னுமொரு ஜென்மம் வேண்டும் எனக்கு..

In a minute I told you

My Love for you..

But Just to prove it

A birth it is necessary..

 

Any government office

Is it nearby to Rejuvenates

life?

I want another life to prove

my Love….

 

5/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*