For Him
இவ்வளவு நாளாக நான் உன்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தேன். அது தவறு.
நான் உன்னை காதலிக்கவில்லை. என் வெட்கம் தான் உன்னை மிகவும் காதலிக்கிறது.
4.10 பில்லியன் ஆண்களைப் பார்த்து வராத வெட்கம் உன்னை பார்க்கும் போது மட்டும் வெளிப்படுகிறதே..
அது உன்னை மட்டும் மிகவும் காதலிக்கிறதென நினைக்கிறேன்.
I don’t know how to smile beautifully.
I don’t know how to hide my anger perfectly.
I don’t know how to express my love properly.
I don’t know how to give a lusty kiss on (your) lips deeply.
How are you going to struggle with a dunce student ?
It’s a bit sad to see you..
எனக்கு அழகாக சிரிக்கத் தெரியாது
கோபத்தை வெளிக்காட்டாமல் மறைக்கத் தெரியாது
காதலை சரியாக வெளிப்படுத்த தெரியாது
உதடுகளில் அழுந்த முத்தமிட தெரியாது
இப்படி ஒரு மக்கு மாணவியாகிய என்னை எப்படி தேர்ச்சி பெற வைக்கப் போகிறாய் நீ?
கொஞ்சம் பரிதாபமாய்த்தான் இருக்கிறது உன்னைப் பார்க்கும் போது..
I guess you have supernatural power to revive the dead.
Yes.. Because you have given life to the love that has been buried in my heart for a long time..
My cute snow bunny has now become a black magician also….
இறந்ததை உயிர்ப்பிக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஏதும் கொண்டவனா நீ?
என் மனதுக்குள் பல காலம் இறந்து புதைந்து கிடந்த காதலுக்கு உயிர் கொடுத்து எழுப்பி விட்டாயே..
Black magic தெரிந்த என் வெள்ளை முயல் குட்டி நீ..
For a long time, I believed
I was in love with you.
No..That’s wrong.
I’m not in love with you..My shyness only loves you so much.
It comes out when it looks
at you, not when it looks at the 4.10 billion men in this cosmos;
I think, it loves you
more deeply than I do..
இப்போதெல்லாம் என் துக்கத்தை மறைக்க தூக்கத்தில் என்னை நானே கரைத்துக் கொண்டிருக்கின்றேன்.
பேசாமல் நிரந்தர தூக்கத்தில் ஆழ்ந்து விட்டால் துக்கத்தின் வலி தெரியாமலேயே இருந்துவிடலாம் அல்லவா?
எங்கே நான் தேடுவேன், இவ்விஷயத்தில் அனுபவசாலிகளை? சொர்க்கத்திலா? நரகத்திலா?
If you calm me down
with kisses at the end of
every fight, I am ready
to fight with you, even throughout the year.
Yes..yes.. Lip-lock is not mandatory. You can
kiss me anywhere…
But researchers have discovered Lip-Lock
helps you live longer.
Then your wish…
ஒவ்வொரு சண்டையின் முடிவிலும் முத்தங்களால் என்னை அமைதிப்படுத்தினால், வருடம் முழுவதும் கூட உன்னுடன் சண்டையிட நான் தயார்.
ஆம்..ஆமாம்.. லிப்லாக் கட்டாயம் இல்லை. நீங்கள் என்னை எங்கு வேண்டுமானாலும் முத்தமிடலாம்.
ஆனால் லிப் லாக் நீண்ட காலம் வாழ உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிறகு உங்கள் விருப்பம்.
In my childhood, the moon seemed
to follow me wherever I walked
in the dark night.
These days I follow the moon
to lift me out of the
darkness in my life.
It has long been believed that
the moon affects our mood.
In my case, it creates ________ !!
என் குழந்தைப் பருவத்தில், இருண்ட இரவில் நான் எங்கு சென்றாலும் நிலா என்னைப் பின்தொடர்வது போல் தோன்றியது.
இந்த நாட்களில் என் வாழ்வில் இருளில் இருந்து என்னை மீட்டெடுக்க உன்னைப் பின்தொடர்கிறேன்,
என் நிலவு மன்னவா!!
These days I’m dissolving myself into sleep to hide my sorrow.
Is it better to go into a deep sleep so that the pain of grief will not be known?
Where do I look for Experienced person in this matter?
In heaven? or
in hell?
இறைவனின் காரியங்களைப் பார்ப்பதற்காக உன்னிடமிருந்து விடை பெற்று வெளியூர் சென்றேன்.
சென்ற பின்புதான் புரிந்தது.
என் இறைவனையே விட்டு விட்டு அங்கு சென்று இருக்கிறேன் என்று.
After getting
acquainted with you,
the chapter of
seeing the moon
as the moon is over.
உன்னோடு பழகிய பிறகு
நிலவை
நிலவாய்
பார்க்கும்
அத்தியாயம் முடிந்து விட்டது.
குளிர் காற்று என்ன,
நீ அனுப்பும்
காதல் தூதுவனா?
உன்னை அடிக்கடி
நினைத்து ஏங்க
வைக்கிறது..
Distance Makes
LOVE
Even closer…
I took leave of you and went to see the things of spiritual.
However, I soon came to understand that my true spiritual connection remained here.
I have left my God here and gone there.
If I were a moon lover, the sky would be my mother-in-law’s house, and my fluffy neighbors would be the clouds.
Our laughter will echo in the starry hall as I present the dessert on mist-made plates.
Please, baby..
Let permit me to amaze everyone in this great universe with moonlight on my face..
நான் உன் (நிலவின்) காதலி எனில், வானம் என் மாமியாரின் வீடாக இருக்கும், மேலும் என் பஞ்சுபோன்ற அண்டை வீட்டார் மேகங்களாக இருப்பார்கள்.
மூடுபனியால் செய்யப்பட்ட தட்டுகளில் நான் இனிப்புகளை வழங்கும்போது எங்கள் சிரிப்பு நட்சத்திர மண்டபத்தில் எதிரொலிக்கும்.
ஆமாம் அன்பே..என் முகத்தில் நிலவொளியுடன், இந்த பெரிய பிரபஞ்சத்தில் உள்ள அனைவரையும் ஆச்சரியப்படுத்த விரும்புகிறேன்.
Is the cool breeze your messenger of love?
It often brings you to my mind and makes me long for you.
I miss you so badly..
In another two hundred million years, a day on Earth will increase from twenty-four hours to twenty-five hours.
Isn’t it enough to think of you twenty-four hours a day?
Should my soul think of you one more hour in the future?
Dear God, why are you so greedy?
இன்னும் இருபது கோடி வருடங்களில் பூமியின் ஒரு நாள் என்பது இருபத்து நான்கு மணி நேரத்திலிருந்து இருபத்து ஐந்து நேரமாக உயர்ந்து விடுமாம்.
இப்போது உன்னை இருபத்து நான்கு மணி நேரம் நினைப்பது போதாதா?
இன்னும் ஒரு மணி நேரம் கூடுதலாய் என் ஆன்மா உன்னை நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமா?
என்ன ஒரு பேராசை என் கடவுளுக்கு?
Yes, you are the problem to me.
In recent days, I didn’t buy rouge, (you made me feel shy often).. so it creates the problem for me with a huge amount in my hand..
My head weight has increased (you made me feel like a celebrity). So my messenger always gets jammed, because of more wishes..So sad.
Finally, My recreational pursuits were hampered. (you made me happy and healthy), so I can’t enjoy the handsomeness of doctors hereafter..
How bad you are…Oh my GOD..
முன்பெல்லாம் வெட்கத்தை மறைப்பதற்கு நடித்துக் கொண்டிருந்தேன்.
இப்போது வேதனையை மறைப்பதற்கு நடிக்க வேண்டியதாய் இருக்கிறது.
என்னை காதலியாய் மாற்றினாயோ இல்லையோ நல்ல ஒரு கைதேர்ந்த நடிகையாக்கி விட்டாய்..
The sunflower, which has never seen dark clouds in its lifetime, grows and blooms upright only for the sun..
That is why it blossoms and blooms in yellow brightness, much like the sun.
If I think only of you and bloom only when I see you, will I become like a moonflower?
Shall I simply disseminate a fragrance that is a cross between vanilla and jasmine to express my love for you while I bloom in the dark?
தன் வாழ்நாளில் சூரியனைத் தவிர கருமேகங்களை பார்த்தேயிராத சூரியகாந்தி வளர்ந்து நிமிர்ந்து மலர்ந்து நிற்பது சூரியனுக்காக மட்டும் தான்..
அதனால் தான் சூரியனை போலவே மஞ்சள் பிரகாசத்தில் மலர்ந்து விகசிக்கிறதாம்.
நானும் உன்னை மட்டுமே நினைத்து, உன்னை பார்க்கும் போது மட்டுமே மலர்ந்து நிற்கிறேன் எனில் நானும் moon flower போல ஆகி விடுவேனா?
இருளில் பூத்து மல்லிகைக்கும், வெனிலா பூவுக்கும் இடைப்பட்ட மணம் பரப்பி என் காதலை உனக்கு மட்டும் அடையாளப்படுத்துவேனா?
You are a master trader in the market of love.
I asked your love for a debt.. but you bargained and bought me completely..
Finally, the two treasures were exchanged between us..
I’m yours now. Your heart for me..
Hmmm… Lifetime settlement.
காதல் சந்தையில் நீ ஒரு தலைசிறந்த வர்த்தகர்.
நான் உன் காதலை கடனாக கேட்டேன்.. ஆனால் நீயோ பேரம் பேசி என்னை முழுவதுமாக வாங்கி விட்டாய்..
கடைசியாக இரண்டு பொக்கிஷங்களும் நமக்குள் பரிமாறப்பட்டது..
நான் இப்போது உன்னுடையவள். உன் இதயம் என்னுடையது.
Earlier, I pretended in front of everyone to hide my shyness – because of you.
Now I am pretending to hide my pain – because of you.
Whether you make me a lover or not, you have made me a good actress.
Thank you..
பார்வைக்குப் புலப்படாது அனந்தசரஸ் குளத்தில் சயனிக்கும் அத்திவரதரைப் போன்று,
உன் வெற்றுச் சட்டைக்குள்ளும் உனதுருவம் பொதிந்துள்ளதோ?
காயப் போட்டிருக்கும் உன் சட்டையைக் கடக்கும் போதெல்லாம்
என் இதயப் பொத்தான்கள் பிய்த்து எறியப்படுகிறதே.
The inky night,
The shivering trees,
The wind like a wet blanket, and
The rain water that is
invading like arrows splashing
through the window..
Isn’t one chair plenty for
both of us to enjoy all this?
Allow the heat from
your chest to be exchanged
with my spine…
Pls Baby..
மை பூசிய இரவு, நடுங்கும் நெடு மரங்கள், நனைந்த போர்வையாய் காற்று,
இதோடு ஜன்னல் வழி தெறித்து விழும் அம்புகளாய் படையெடுத்து வரும் மழை நீர்..
இத்தனையும் ரசிக்க ஒற்றை நாற்காலி போதாதா நம் இருவருக்கும்?
பரஸ்பரம் வெப்பத்தைபரிமாறிக் கொள்ளட்டும் உன் முன்னழகும், என் பின்னழகும்..
நிலாவில் பாட்டி வடை சுடுகிறார்.
தலையும் தலையும் முட்டினால் தலையில் கொம்பு முளைக்கும்.
மயிலிறகை நோட்டு புத்தகத்தில் வைத்து அது குட்டி போடும்.
கிரகணம் என்றால் சூரியனை அல்லது சந்திரனை பாம்பு விழுங்கும்.
தும்மினால் நூறு வயது..
இது போல மூட நம்பிக்கை விஷயங்களை குழந்தைப் பருவத்தில் நிறைய நம்பியிருக்கிறேன்..
ஆனால் இதில் மயிலிறகு குட்டி போடும் என்பது மட்டும் மூட நம்பிக்கை அல்ல,
அது உண்மைதான் என்பதை உன் குடும்ப புகைப்படத்தைப் பார்த்து தெரிந்து கொண்டேன்..
Even if I show your photo once in a minute,
my infant heart is crying and beating itself without satisfaction.
Please do some convincing of my heart that yearns to see you, darling..
உன் புகைப்படத்தைக் காட்டியும் கூட சமாதானமாகாமல்,
உன்னைப் பார்த்தே தீர வேண்டுமென்று அழுது துடிக்கிறது என் இதயக் கைக்குழந்தை..
கொஞ்சம் சமாதானப்படுத்தேன், ப்ளீஸ்..
You: “How long will you compliment my handsomeness? When will it come to an end?”
Me: I’m a hungry little ant. If you’re in front of me like an ocean of milk, what can I do?
(I shall sip and relish your cuteness till the ocean of milk becomes empty).
இன்னும் எவ்வளவு நாள் தான் என் அழகைப் புகழ்ந்து கொண்டே இருப்பாய்? எப்போது முடியும் என கேட்கிறாயா?
பசியில் இருக்கும் சிறு எறும்பாகிய என் முன் பாற்கடலாக நீ இருப்பின் என்னால் என்ன செய்ய முடியும்?
பாற்கடல் வற்றும் வரை உன்னை குடித்துக் கொண்டே மன்னிக்க, உன்னை ரசித்துக் கொண்டே இருப்பேன் நான்..
Grandma deep fry vada at the moon.. If the head and the head collide, a horn will grow on the head.. Put the peacock feather in the note book and it will hatch.. An eclipse is when the sun or moon is swallowed by a snake.. If we sneeze, we will live a hundred years..
I used to believe in such things a lot in my childhood. But seeing my babe’s baby
made me realize it’s not just a superstition, it’s true..
Yes..the peacock feather
will hatch.
My moon man come back to illuminate my world,
I am sure he is perfect in every aspect.
His radiant glow captivates my heart,
A wonder of the earth, he is ever so bright,
I feel comfort because of his guiding grace,
My moon man, my all, my heart’s safe place.
If every drop of water that falls from the shower head
turns into a flower and caresses my skin,
should I bathe in the midst of that flowers heap?
or stand with blushing without doing anything?
தூவாலைக் குழாயிலிருந்து வீழும் ஒவ்வொரு துளி நீரும்
ஒரு பூவாய் உருமாறி என் மேனியை தழுவுகிறதெனில்,
மொத்த பூக்குவியலுக்கிடையே நான் குளிக்கவா?
சிவந்து நிற்கவா?
பிரம்மாவின் சோம்பேறித்தனம் எனக்கு இப்போது புரிகிறது.
உனக்கு பிறகு இந்த பூமியில் யாரும் அழகாக பிறக்கவில்லை,
இல்லையா?
Baby…
Don’t be so sweet.
I am so tempted
to eat you whole,
biting through.
இவ்வளவு இனிமையானவனாக இருக்காதே.
அப்படியே கடித்து திங்க வேண்டும் போல் ஆசையாய் இருக்கிறது.
It’s the second time, I sense your soul very close to me while sleeping.
That closeness, hot breath, soft touch, snug hug all I felt in real.
May be it would be a Ghost..
Till I run a family with you, I just run my life with a ghost at least.. Please..
I think it would be a beneficial experience before I start a family with you..
he..he..he..
உறங்கும் போது உங்கள் ஆன்மா எனக்கு மிக அருகில் இருப்பதை உணர்வது இது இரண்டாவது முறை.
அந்த நெருக்கம், சூடான மூச்சு, மென்மையான ஸ்பரிசம், சுகமான அணைப்பு எல்லாமே நிஜமாகவே உணர்ந்தேன்.
ஒருவேளை அது பேயாக இருக்கலாம்..
நான் உன்னுடன் குடும்பம் நடத்தும் வரை, குறைந்தபட்சம் ஒரு பேயுடன் என் வாழ்க்கையை நடத்துகிறேன்.
நான் உங்களுடன் ஒரு குடும்பத்தை தொடங்குவதற்கு முன் இது ஒரு பயனுள்ள அனுபவமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
Now I understand
Brahma’s laziness.
After you were born,
No one was born
Handsome
On this earth, right?
My Dear Student, come to me without fear..I want to import my learning with eager.
Let my lap be your chair. No guide was needed..My hand will guide you..
Without discrimination between Teacher and Student, together we’ll
explore and learn the insights of love
within a close embrace.
Me and my knowledge are
waiting to be yours.. So,
Take your own time to check out my entire knowledge I possess.
But, Come to me anyway..
Who said flowers can’t talk?
His eyes, hidden beneath bushy brows,are like blooming lilies..
It speaks to me to think of a gazillion love stories.
Only I can understandhis mischievous language.
However, I will not etymologize the language his eyes speak.
Because I am the only queen who governs his words.
பூக்களால் பேச முடியாது என்று யார் சொன்னது?
புதர் புருவங்களுக்கு அடியில் மறைந்திருக்கும் அவனது கண்கள் பூக்கும் அல்லிகள் போல..
ஒரு கேஜில்லியன் காதல் கதைகளை நினைத்துப் பார்க்க இது என்னிடம் பேசுகிறது.
அவனுடைய குறும்பு மொழி எனக்கு மட்டுமே புரியும்.
இருப்பினும், அவன் கண்கள் பேசும் மொழியை நான் சொற்பிறப்பியல் செய்ய மாட்டேன்.
ஏனென்றால் அவருடைய வார்த்தைகளை ஆளும் ஒரே ராணி நான்தான்..
Until I saw you, I thought pink was my favorite color.
but the black color adjacent to pink stole my heart.
Yes..Your black moustache now rules my mind. You can use your lips to sip my lipstick color as a gift.
For a return gift, Could you pierce my soul like an acupuncturist with that black, incalculable soft needle, baby?
Each time, I’m mesmerized by your luxurious lip Adornment.
Yes, that is your
magnificent moustache.
My eyes are captured by
its alluring display.
It can’t wait for long time
to embrace the glory of
your whisker.
Please baby… allow my
eyelids to caress the
mystery of your charm.
ஒவ்வொரு முறையும், உங்கள் ஆடம்பரமான உதடு அலங்காரத்தில் நான் மயங்குகிறேன்.
ஆம், அது உங்களுடைய அற்புதமான மீசை.
அதன் கவர்ச்சியான காட்சியால் என் கண்கள் ஈர்க்கப்படுகின்றன.
உங்கள் மீசையின் மகிமையைத் தழுவ நீண்ட நேரம் காத்திருக்க முடியாது.
ப்ளீஸ் பேபி… என் கண் இமைகள் உன் அழகின் மர்மத்தை கவ்வ அனுமதியுங்கள்..
Are you a cannibal?
Then why do you
try to kill me
everyday?
( with your charms)
நர மாமிசம் தின்பவனா நீ?
பின் ஏன் என்னை கொல்ல முயல்கிறாய்?
தினமும் உன் அழகால்..
I love pink color..
That too
‘BABY’
pink color..
நீ உயிருடன் இருக்கிறாயா, இல்லையா என்று கூட தெரியாமல் பயந்து சாவதை விட,
உன்னோடு பழகியிராத மனோபாவத்துடன் தனிமையில் வாழ்வது எவ்வளவோ மேல்..
Thoughts are
very powerful.
Yes..We will become what we keep
thinking about.
But, Now I’m afraid
that I will turn into
a man at this age.
Shall I become
like you, baby?
எண்ணங்களுக்கு வலிமை உண்டு. ஒன்றைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தால் நாம் அதுவாகவே மாறி விடுவோம்..
இப்போது எனக்கு பயமாய் இருக்கிறது. இந்த வயதில் நான் ஆண் பிள்ளையாய் மாறி விடுவேனோ என்று..
நான் உன்னைப் போல மாறி விடுவேனோ?
என் நிலவே.. பகலில் எங்கு வேண்டுமானால் சுற்றிக் கொள். தினமும் இரவு வேளைகளில் மட்டும் என் வீட்டிற்குள் வந்து விடேன்..
சிவன் தன் தலையில் உன் பிரதியை தாங்கிக் கொண்டிருப்பதைப் போல, உன்னை என் கைகளிலே ஏந்திக் கொண்டு வீடு முழுக்க அலைந்து திரிய வேண்டும்.
இரவில் உன்னை அழைப்பதால் தவறாக எண்ண வேண்டாம்.
ஏனெனில் இப்போதெல்லாம் eb பில் அதிகமாகிக் கொண்டே வருகிறது.. அந்த பணத்தை மிச்சப்படுத்தத்தான்.
எந்த உள்நோக்கமும் இல்லை.. (நீங்கள் என்னை நம்ப வேண்டும், அன்பே..)
Baby..
I just want to
confirm one thing..
Before eating fruits like Bananas, Oranges, etc.,
we should peel them off,
right,Darling?
It is better to live alone with an attitude that you’re not close to me,
than,
to die in fear of not even knowing whether you are alive or not..
எங்கு தேடியும் கிடைக்கவில்லை, உன் உதட்டின் நிறமொத்த உதட்டு சாயம்..
பேசாமல் நீயே தந்து விடேன் எனக்கு,நாள் தவறாது ஒரு உதட்டு முத்தம்..
இல்லை, இல்லை உதட்டு சாயம்..
My Lup-Dup Heart
beats like Lap-Top
these days.
It does not mean
it becomes a Techie.
The reason is that
whenever I see you,
I want to sit on Your Lap
or hold you in My Lap.
Nice rhythm, neah?
Lap-Top… Lap-Top..
Hey, My Moon Man..
Come to my home at night..
Hey.. wait..wait..
Don’t get me wrong, because
I asked you to come at night..
Like Shiva carrying your replica
on his head, I want to wander
around the house with you..
Because nowadays EB bill of
our house is getting high..
Just want to save that money..
There is no ulterior motive..
(You have to believe me, Darling..)
Most male birds, such as
Roosters and Peacocks,
are more attractive than
their female counterparts.
I firmly believe that
this canon will continue for
even humankind now,
after seeing you..
Yeah.. Males are typically
the most colorful sex
சேவல் மற்றும் மயில் போன்ற பெரும்பாலான ஆண் பறவைகள் அவற்றின் பெண் சகாக்களை விட கவர்ச்சிகரமானவை.
உன்னைப் பார்த்த பிறகு, இந்த நியதி இப்போது மனிதகுலத்திற்கும் தொடர்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஆம். ஆண்கள் பொதுவாக மிகவும் வண்ணமயமான பாலினம்.
I couldn’t find a color of lipstick that seems the same as your lips anywhere.
Better, you give me a Lip kiss, sorry, sorry Lip color every day.
It’s just a LIP DYEING process, Baby..
Key கொடுத்தால் பேசும் பொம்மை இருக்கிறதாம்.
உன்னை முழுதாய் மேய மன்னிக்க.. ஆராய வேண்டும், Key ஏதும் இருக்கிறதா என..
முழு ஒத்துழைப்பு கொடுத்து விடு..
Key இல்லையென்றாலும் நீ பொம்மை என்பது உறுதி தான்.
ஏனெனில் எனக்குதான் உன்னை எந்நேரமும் கொஞ்சிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறதே.
How can flowers bloom with petals if fire is placed at the top of a green plant?
You sowed pain in my heart.
Then, how can you expect my lip bud to smile?
My eager eyes love to see the blooming flower.
My thirsty heart yearns to softly touch its petals.
My agitated lungs long to breathe its fragrance.
But how can I open up that flower’s heart, guarded by a fence?
I know words alone cannot suffice, Action must be taken to dance with the flower…
I am looking for the key to enter there. I will find the way one day, but not by force, but by grace.
Let me be part of cherishing that
nestled, safe space…
My heart is like an Akshaya Patra which never-depleting supply of love.
But now that divine vessel has become a begging vessel for your love..
அள்ள அள்ள குறையாத காதலைத் தரும் அட்சய பாத்திரம் என் மனது..
உன்னிடம் அன்பை யாசகம் கேட்டு பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கிறது, இப்போது..
One thing you may know is that there is a talking doll if we give a key.
I have to examine every inch of your body to check if you have any key…
For that my Sweetheart, I need your complete cooperation.
Even if there is no key, it is certain that you are a doll.
Because I feel like I have to keep kissing you all the time.
அடிக்கடி சிரித்து வைக்காதே.. உன் பால் போன்ற வெள்ளைச் சிரிப்பில் நனைந்து நனைந்து பால்கோவாவாய் மாறிப் போனது என் இதயம்.
பார்த்ததற்கே இவ்வளவு இனிப்பாய் மாறிப் போனேன் எனில் உன்னைப் பருகினால் எப்படி இருக்கும்?
உன் சிவந்த இதழ்கள் – சிவப்பு மிளகாய் வற்றல்
உன் பால் பற்கள் – பனீர் உருண்டைகள்
ஆக பால் சிரிப்பைக் குடிக்கவா? பனீர் பற்களைக் கடிக்கவா?
I just bought a guinea pig recently and started rehearsing how to kiss you without disturbing your nose.
How similar an appearance you both have, especially that long beak. oh..Sorry, sorry, Nose.
Whimsical cuteness overloaded in one place..
நேற்று தான் Guinea pig வாங்கி உனது பெயரிட்டு ஒத்திகை பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்,
மூக்கு இடிக்காமல் முத்தமிடுவது எப்படி என..
யப்பா..என்ன ஒரு உருவ ஒற்றுமை உங்கள் இருவருக்கும்..
முக்கியமாய்
அந்த நீள மூக்கு.
Yes, I am shy, no matter what. But don’t think I’m worth nothing.
I will be shy only in the light.
Otherwise…
It means that the light in your eyes is very bright.
I blushed and stood motionless, forgetting everything.
Otherwise, I am a very good nocturnal bird.
எதெற்கெடுத்தாலும் வெட்கப்படுகிறாளே – இவள்
எதற்கும் லாயக்கில்லை என்று எண்ணி விடாதே..
வெளிச்சத்தில் மட்டும் தான் நான் வெட்கப்படுவேன்..
மற்றபடி…
அதாவது உன் விழிகளின் வெளிச்சம் தாளாமல் தான்
நான் வெட்கத்தில் சிவந்து மெய் மறந்து அசையாமல் நின்றுவிடுகிறேன்..
மற்றபடி,
I am a nocturnal bird..
Don’t smile too often. Your milky-white smile made my heart as Palakova Billalu.
Just seeing you makes me so sweet. How would it be if I could taste you?
But sometimes your words are spicy because of those Guntur red chilli lips?
It’s ok.. However, it is compensated by your milky teeth, which look like paneer balls.
Let’s ignore that spicy matter. Just consider the sweet chapter.
So may I drink your milky smile? Or bite your paneer teeth?
When I thought about how you have so much money to travel all over the world so often, I understood one thing.
You have priceless paintings, right? I also need crores of rupees.
For that I have to enter your house at night and steal your scribbling notebook.
Wait, it’s better to burglarize the painter than the painting, isn’t it?
Be careful, my love. I am going to kidnap you.
My 86 billion neurons complain that I am thinking of you 24 hours a day.
I don’t know which organ is spreading this rumor.
My lips (that chant your name)?
My eyes (that searching for you)?
My ears (that so eager to hear your voice)?
I suspect all of these. But that is a blatant lie.
I think of you only at times other than my sleeping time.
Definitely not 24 x 7.
Maybe 19 x 7?
எனது 86 பில்லியன் நியூரான்கள் 24 மணி நேரமும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதாக புகார் கூறுகின்றன.
எந்த உறுப்பு இந்த வதந்தியை பரப்புகிறது என்று தெரியவில்லை.
உன் பெயரை உச்சரிக்கும் என் உதடுகள்?
உன்னைத் தேடும் என் கண்கள் ?
உன் குரலைக் கேட்க ஆவலாக இருக்கும் என் காதுகள் ?
இவை அனைத்தையும் நான் சந்தேகிக்கிறேன். ஆனால் அது அப்பட்டமான பொய்.
நான் உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் மட்டுமே உன்னைப் பற்றி நினைக்கிறேன்.
கண்டிப்பாக 24 x 7 இல்லை. ஒருவேளை 19 x 7?
கைகளில் வில் இல்லாததால் நீ என் மன்மதன் இல்லை என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே நிமிர்ந்து பார்த்தால் அத்தனை அம்புகளையும் உன் கண்களில் அல்லவா பதுக்கி வைத்திருக்கிறாய்..
மொத்தமாய் என் இதயத்தை நோக்கி எய்து விடாதே..
நம் காதலின் கரு அங்கேதான் வளர்ந்து கொண்டிருக்கிறது..
10 மாதத்தில் பெற்றெடுக்க அது மனிதக் குழந்தை அல்ல..
20 மாதம் கர்ப்பம் சுமக்க நான் யானையும் அல்ல..
நம் இருவர் ஆயுள் வரையும் வளர்ந்து கொண்டே இருக்கும் தெய்வீக காதல் கரு அது..
My intellect, which correctly perceives all the lies I tell as my imaginations for poetry, tries to believe only the lies you tell as truth..
Especially when you call me cute..
Don’t tell me that lie again and again..
I am going to attend to the Mrs World pageant believing it to be true..
நான் சொல்லும் பொய்யை எல்லாம் கவிதைக்கான கற்பனை என்று சரியாக கண்டு கொள்ளும் என் அறிவு,
நீ சொல்லும் பொய்யை மட்டும் உண்மையென நம்பி விட துடிக்கிறது..
அதிலும் குறிப்பாய் நீ என்னை அழகி என்று சொல்லும் போது..
திரும்ப திரும்ப அந்த பொய்யை என்னிடம் சொல்லாதே..
உண்மை என நம்பி உலக அழகிப் போட்டிக்கு சென்று விடப் போகிறேன்..
Only now have I found that in my dictionary, the word happiness means your name.
When shall I see again my happiness that came with you in the air?
My heart condoles my eyes throughout the day.
Lips lose their flexibility without a smile.
Lungs often expand due to longing sighs.
There is only life in the body. That’s it.
என் அகராதியை இப்போதுதான் புரட்டிப் பார்க்கிறேன்.
அதில் சந்தோஷம் என்ற வார்த்தையின் பொருள் உன் பெயர்தான் அச்சிடப்பட்டுள்ளது.
காற்றின் வழியே உன்னோடு வந்து சேர்ந்து விட்ட என் சந்தோஷத்தை எப்போது மறுபடியும் காண்பேன்?
சுற்றியுள்ளவர்கள் துக்கம் விசாரிக்கும் அளவுக்கு அழுது வடிகிறது என் முகம்..
I was thinking that you are not my cupid, because you don’t have a bow in your hand.
But I only knew when I looked up that you had hoarded all the arrows in your eyes.
Dear my Cupid, Don’t shoot all the arrows in my heart at once..Because, The embryo of our love is growing there..
It is not a human baby to give birth in 10 months..
I am not an elephant to be pregnant for 20 months..
The embryo continues to grow according to the lifetime of both of us. Because it is the embryo of DIVINE LOVE.
For now, you are the only one capable of making my heart burst with laughter and filling my eyes with tears.
I had already cried a lot before meeting you.
Please let me be your companion forever.
Because I want to live happily and enjoy your handsomeness by seeing you for the rest of my life.
I won’t lie that I don’t want to live in this town without you.
But my lungs are adamant to admit no other gas than the breath you exhale.
As far as my lungs are concerned, all the air that your breath does not mix with is bitter air.. not better..
Come and give life before the incubation oxygen runs out..
நீ இல்லாத இவ்வூரில் உயிர் வாழவே விருப்பமில்லை என்று பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்.
ஆனால் என் நுரையீரல் தான், நீ வெளிவிட்ட மூச்சுக் காற்றைத் தவிர வேறு எந்த ஒரு வாயுவையும் உள்ளே விட மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.
என் நுரையீரலைப் பொறுத்த வரை உன் மூச்சுக் காற்று கலக்காத அத்தனைக் காற்றும் வெற்றுக் காற்று தான்.
அடைகாத்து வைத்திருக்கும் ஆக்ஸிஜன் தீரும்முன் வந்து உயிர் தந்து விடு..
மெத்தையாய் நானிருக்க நீ ஏனடா தலையணையை தேடி ஓடுகிறாய்?
வைரச் சுரங்கத்தின் மீது நின்று கொண்டு, கூழாங்கற்களைத் தடவி மகிழ்ந்து கொண்டிருக்கும் முட்டாளடா நீ..
I’ve hurt you with words..
Please permit my lips one more time..
This time I treat your wounds with my kiss treat..
வார்த்தைகளால் உன்னை காயப்படுத்தி விட்டேன்..
என் உதடுகளுக்கு இன்னொரு முறை அனுமதி கொடு..
உன் காயங்களை என் முத்தங்களால் வருடி விட..
I want to curl up on your lap and listen to our favorite love songs on a chill evening when the rain begins to sprinkle its fragrance.
At that time..
Let our hearts beat in sync with the rhythm of the music.
Let our unsung love ballad unravel in the knots of our nerves.
Let the strings of music swim in our blood.
Permit me to lay my head rest on your plush shoulders..
After all of this, I pray for the blessing of eternal sleep on your chest.
மழை தனது வாசத்தை தூவ ஆரம்பிக்கும் ஒரு குளிர் கால மாலைப் பொழுதில், உன் மடியில் அமர்ந்து கொண்டு, நமக்குப் பிடித்த காதல் பாடல்களை கேட்க ஆசை எனக்கு.
இசையின் தாளத்தில் நம் இதயங்கள் ஒத்திசைந்து துடிக்கட்டும்.
பாடப்படாத நம் காதல் பாட்டு, நம் நரம்புகளின் முடிச்சுகளில் அவிழப்படட்டும்.
நம் இரத்தத்தில் இசையின் சரங்கள் நீந்தட்டும்.
உன் பஞ்சு மெத்தை தோள்களில் என் தலை ஓய்வெடுக்கட்டும்..
உன் நெஞ்சிலேயே நிரந்தரமாய் நான் தூங்கிவிட்டால் ஆசிர்வதிக்கப்பட்டவள் ஆவேன்.
When I am a mattress for you,
why are you running around looking for a pillow?
My dear brownie brainy,
You are enjoying rubbing pebbles,
while standing on top of a diamond mine.
என்னைப் படைத்த அசதியில் தூங்கி விட்ட பிரம்மன், காலம் கழித்து எழுந்ததில்,
எனக்கு ஒரு ஜோடியை படைக்க மறந்தது புரிந்து,
பின் அவசரம் காரணமாக, அந்த மன்மதனையே அனுப்பி வைத்து விட்டானோ, உன் உருவில்..
தாமதமாகத் தான் உன்னை அனுப்பினான், ஆனால் எனக்கு தக்க ஜோடி நீ மட்டுமே..
The darkness of my eyes longs for the light of your smile.
My ears yearn to be warmed by the murmur of your lips.
My heart beats to unravel at the touch of your finger-flower.
If my entire being waits for you, do you exist inside of me?
Where do I reside, then?
என் கண்களின் இருள், உன் சிரிப்பின் வெளிச்சத்திற்காக ஏங்குகிறது..
என் காதுகள் உன் உதட்டசைவில் உயிர் பெற்று சூடேறுவதற்காய் காத்துக் கிடக்கிறது.
என் இதயம் உன் கைவிரல்களின் ஸ்பரிசத்தில் அவிழ்ந்து விடத் துடிக்கிறது.
என் ஒட்டு மொத்த ஆன்மாவும் உனக்காக காத்துக் கிடக்கிறது எனில், என்னுள் நீ தான் வாழ்கிறாயா? பின், எங்கே நான் வாழ்கிறேன்?
Nowadays my night husband doesn’t like me.
He said I was approaching him keeping you in my mind.
Shall I lie to him to give birth a sleep baby?
Or should I divorce my night husband and stay up all night?
Otherwise, neither you nor him, shall I sleep forever in a tomb?
இப்போதெல்லாம் இரவுக் கணவனுக்கு என்னைப் பிடிப்பதே இல்லை..
உன்னை மனதில் வைத்துக் கொண்டு அவனை நெருங்குகிறேனாம்.
இல்லை என்று பொய் அவனை ஏமாற்றி தூக்கக் குழந்தையைப் பெறுவதா?
இல்லை, இரவுக் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று இரவு முழுவதும் விழித்தே கிடப்பதா?
இல்லை, இருவருக்கும் இல்லாமல் ஒட்டு மொத்தமாய் சமாதிக்குள் நிரந்தரமாய் தூங்கிப் போவதா?
Brahman, who created me, forgot to create a pair for me and slept for a long time.
When he woke up, he sent that cupid in your form out of haste.
Yes, he sent you late, but you are the perfect mate for me..
கிட்டத்தட்ட 10,11 வருடங்களாக அம்புலி மாமா காமிக் புத்தகம் வெளிவரவில்லையே என்று வருந்தினேன்.
நான் என்ன அதிர்ஷ்டசாலி பெண்?
அந்த அம்புலி (அதாவது: சந்திரன்) நேரடியாக கீழே இறங்கி என்னிடம் கதை சொல்கிறார்.
நான் கதையைக் கேட்கும்போது, நீங்கள் எனக்கு அம்மாவாகி, நான் உங்கள் குழந்தையாக உணர்கிறேன்.
அப்புறம் நீ என் தாயுமானவன்?
ஆம்..தூய அன்பின் அடையாளம் அம்மா, அந்த அன்பு எங்கெல்லாம் தேவையோ அங்கே நீயே என் தாய்.
Never call a non-living thing your girlfriend, even for fun.
Because they can’t understand your words of implicit love like mine.
Without your romantic words, its iron heart, longing and yearning for your love, would rust, break and die.
Because their hearts are not made of steel like mine.
வேடிக்கையாக கூட அஃறிணை பொருள்களை
உன் காதலி என்று கூறி விடாதே..
அவையொன்றும் என்னைப் போல
எஃகு மனம் படைத்ததல்ல..
நீ இலை மறைவு காயாய்
உன் காதலை சொல்லுவதை புரிந்து கொள்ள..
உன் காதலுக்காக ஏங்கி ஏங்கி
அதன் இரும்பு இதயம் துருப்பிடித்து போய் விடின்
உடைந்து நொறுங்கி உயிரை விட்டு விடும்..
அநியாயமாய் கொலைப் பழிக்கு ஆளாகாதே..
To dance in front of you, I practice hard.
Not to learn dance steps. To dance out of shyness.
Like you, my shyness is also growing hugely in my heart.
As you are about to leave me, please allow my shyness to practice “sati.”.
Because without you, my shyness doesn’t know how to live in widowhood.
உன் முன்னால் நடனம் ஆடுவதற்கு தீவிரமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்..
நடனப் படிகளை கற்றுக் கொள்ள அல்ல.. வெட்கத்தை விட்டு ஆடுவதற்கு..
உன்னோடு என் வெட்கமும் என் உயிர் வரை வேர் விட்டு வளர்ந்து நிற்கிறது..
என்னை விட்டு பிரிய நேர்கையில் என் வெட்கத்தையும் உடன்கட்டை ஏற்றி விட்டுப் போய் விடு..
ஏனெனில் நீயின்றி விதவைக் கோலத்தில் வாழ்வதற்கு என் வெட்கத்திற்கு தெரியாது.
I regretted that Ambuli Mama comic book was not published for almost 10,11 years..
What lucky girl am I?
That Ambuli (mean: Moon) descends directly and tells me the story.
When I listen to the story, you become my mother and I feel like your child.
Then you are my Thaayumanavan?
Yes..Mother is the symbol of pure love, wherever that love is needed, there you are my mother.
உன் மீசையின் முடிக் கற்றைகள்
எவ்வளவு உள்ளதென கணக்கெடுத்து வை..
அவ்வளவு குத்து நான் உனக்கு தர வேண்டும்
கைகளால் அல்ல.. என் உதடுகளால்..
ஒரு வருடத்திற்கு அல்ல .. ஒரு நிமிடத்திற்கு..
தைரியம் இருந்தால் உன் உதட்டை மட்டும்
தனியே அனுப்பி வை..
காதல் யுத்தத்தில் நான் கோபால கிருஷ்ண கோகலே
போல மிதவாதி அல்ல ..
பால கங்காதர திலக் போல தீவிர தேசியவாதி நான்..
There are three types of freedom.
“freedom from,”
“freedom to,”
“freedom to be,”
Let freedom reign in your world of clothing.
Because more freedom is a good thing than partial freedom.
Freedom has no limits, so in this case, you can cross the limit.
Because a devotee has been standing at the gate of heaven for a long time,
to see your wholesome handsomeness. Yes, that was me, absolutely.
உன் ஆடை உலகில் சுதந்திரம் ஆட்சி செய்யட்டும்..
ரோஜாப் பூவிதழ் ஆடையால் சுற்றப்பட்ட தாமிர நிறத் தாமரை நீ..
கட்டவிழ்த்து விடு இதழ்களை..
உன் கட்டழகைக் காண சொர்க்க வாசல் முகப்பில்
சொக்கிப் போய் நிற்கும் பக்தை நான்..
இவ்விஷயத்தில் நீ வரம்பு மீறலாம்,
தவறில்லை..
I made a mistake by
keeping you in my eyes.
All the ants in our town
are marching towards
my eyes, in search of you.
Now my question is,
shall I use compact powder on my face?
or should I apply
ant killer powder
on my face?
உன்னை என் கண்களில் பதுக்கி வைத்து தவறிழைத்துவிட்டேன்..
ஊரில் உள்ள எல்லா எறும்புகளும் உன்னைத் தேடி என் கண்களை நோக்கி அணிவகுத்து வருகின்றன..
இப்போது என் கேள்வி என்னவென்றால்,
இனி நான் என் முகத்தில் காம்பாக்ட் பவுடர் பயன்படுத்துவதா? அல்லது எறும்பு கொல்லி பவுடரை பயன்படுத்துவதா?
Count the strands of your moustache and
Tell me how much there is
That much count I want to punch you.
Not with hands, but with my lips.
Not for a year, but for a minute.
I am not a moderate like Gopala Krishna Gokhale in love war.I am an extremist like Bala Gangadhara Tilak.
If you dare, send your lips alone for boxing with my lips.
Today is love’s birthday.
You ask why I didn’t tell you about my love.
Are you going to understand my love in one day, which you couldn’t understand when I expressed it for those 364 days?
காதலின் பிறந்த நாளான இன்று,
“ஏன் உன் காதலை என்னிடம் சொல்லவில்லை”,
என்று கேட்கிறாய்?
364 நாளில் சொல்லி விடாத என் காதலையா
இன்று ஒரு நாளில் சொல்லி
உனக்கு புரிய வைக்கப் போகிறேன்?
I may envying the beauty of the moon,
But cannot vying by the way of Mirror dressing.
Damn sure,
Because,
He’s damn cute.
Yes, I had a smile in my heart as well as tears in my eyes.
Because our love musician made me listen to our sweet symphony and made every musical note a whisper of our love story.
I pray to God that our love will remain as long as that song, which is wrapped by our memories.
If I don’t know how to dance properly,
You are dancing with me to practice together.
If I don’t know how to sing properly,
You are singing with me to practice together.
Now I can’t sleep properly.
will you?
எனக்கு சரியாக ஆட வரவில்லையென்றால்
கூட சேர்ந்து ஆடி பயிற்சி பெற வைக்கிறாய்..
எனக்கு சரியாக பாட ஆட வரவில்லையென்றால்
கூட சேர்ந்து பாடி பயிற்சி பெற வைக்கிறாய்..
எனக்கு இப்போது சரியாக தூக்கம் வரமாட்டேன் என்கிறது..
என்ன செய்யப் போகிறாய் இப்போது?
இதழ்கள் சொல்லத் துடிப்பதை
என் கண்கள் சொல்லி விடுமோ
என்ற பயத்தினில் தான்
நான் உன்னைப் பார்ப்பதையே
தவிர்க்கிறேன்.
இற்றுப் போயிருக்கும் என் இமைகளின் செல் சுவர்களை
உற்றுப் பார்க்காதே..
உடைந்து வழியும் என் காதல்
வெள்ளத்தில் நீ கரை சேருவது
என்றும் கடினம்..
I waited for you holding my heart tight,
not knowing whether you would come or not.
This is just Like stirring and roasting my emotions in the cauldron of my soul..
If I know that you definitely come,
I am ready to wait forever,
Like our love..
Your presence is sweet essence to my heart..
நீ கண்டிப்பாய் வருவாய் எனும் பட்சத்தில்
காலமெல்லாம் காத்திருக்க நான் தயார்,
நம் காதலைப் போலவே..
ஆனால் எவ்விவரபும் அறியாமல்
நீ வருவாயா, மாட்டாயா என்பது புரியாமல்
என் இதயத்தை கையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு
காத்திருப்பதென்பது, என் உயிர் வாணலியில்
என் உணர்ச்சிகளைக் கிளறி வறுத்தெடுப்பதற்கு
ஒப்பானதாகும்.
உன்னுடைய இருப்பு என் இதயத்திற்கு இதமானதொரு இனிப்பு..
கொடுப்பதா?
பெறுவதா?
இல்லை, வெட்கப்படுவதா?
ஓர் இரவில் MULTITASKER ஆவது எப்படி என்று
கற்க வேண்டும் போலிருக்கிறதே..
Why should I praise you like others with mere words formed by lips?
Lips have more nerve endings than any other part of our body.
So, I can share my emotions with you through my lips.
What I mean is
I can sing, make vocal percussion etc.,
What my lips want to say, my sparkling eyes will tell you.
Because of that fear, I avoid seeing you.
As I lower my eyes, Don’t stare at the cell wall of my weak eye-lids.
When it breaks, in the great flood of my love, it is always difficult for you to reach the shore.
I feel guilty because of you. Then?
I made a blender mistake for our environment. A report says 2023 will be the hottest year in the last 100,000 years.
Why did I have to meet you last year?
Am I the cause of this problem? OMG..
I am a self-respecting girl.
Only my heart and mind thought you were the almighty and it wanted to be your slave.
Other than that I will not compromise.
Because I have high(?) self-esteem.
Give?
Get?
or,
Shy?
It seems like I have to learn how to become a multitasker overnight.
Just realized yesterday you are not a human..
Because humans inhale oxygen and exhale carbon-dioxide..
If I am alive in the breath you release,
You are not a human, are you?
Don’t feel bad about not having own house.
I am registering my only house in your name.
The width of the house will be more than you need. But the height is only 158 cm. Is it okay for you?
When do we register the property?
உனக்கு சொந்தமாக வீடு இல்லை என்று வருத்தப்படாதே. எனக்கு சொந்தமான எனது ஒரே ஒரு வீட்டை உன் பெயருக்கு எழுதி தருகிறேன்.
வீட்டின் அகலம் என்னவோ உனக்கு தாராளமாகத்தான் இருக்கும். ஆனால் உயரம் மட்டும் 158 cm தான். பரவாயில்லையா உனக்கு?
எப்போது கிரையம் வைத்துக் கொள்ளலாம்?
Not just for this life,
Love with you is enough for all my future births..
Hence, at least in my next life I should be born as your daughter. not for roaming around the world with you,
to get around you as my world, without getting bored..
இந்த வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இனி வரும் எல்லா பிறவிகளுக்கும் உன்னுடனான அன்பே போதும்..
எனவே, எனது அடுத்த ஜென்மத்திலாவது உன் மகளாகப் பிறக்க வேண்டும்.
உன்னுடன் உலகம் முழுவதும் சுற்றுவதற்காக அல்ல..
சலிப்பில்லாமல் உன்னை என் உலகமாக சுற்றி வர..
If you ask me why I am shy,
Except for being shy What other answer could I have?
Hope you got the right answer..
உன்னால் எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன், உன்னைத் தவிர..
ஒருநாள் என்னையே மறந்து தொலைத்து விட்டு வந்து நிற்கப் போகிறேன், உன் முன்னால்.
கண்டுபிடித்து கொடுத்துவிடு .
வேறு யார் தொலைந்த என்னை கண்டுபிடிக்க முடியும், உன்னைத் தவிர?
You turned me from a lioness into a Jenny donkey
which is carrying bundles of your sweet memories.
Me, a wise donkey who knows the smell of camphor?
பெண் சிங்கமாய் இருந்த என்னை
உன் நினைவு மூட்டைகளை சுமக்க வைத்து
பெண் கழுதையாய் மாற்றி விட்டாய்..
மொத்தத்தில் கற்பூர வாசனை தெரிகின்ற
கழுதை நான், இப்போது..
It doesn’t matter where you go.
Take our love with you.
The child of love born to us stands as an orphan,
without knowing the path you took..
நீ எங்கு சென்றாலும் பரவாயில்லை.
கையோடு நம் காதலையும் கூட்டிக் கொண்டு போ.
நமக்குப் பிறந்த காதல் குழந்தை அனாதையாய் நிற்கிறது,
நீ சென்ற வழித்தடம் தெரியாமல்..
I forget everything because of you,
but, except you..
One day I am going to forget myself and stand before you without me.
Find me and give me back..
Who else but you can find me lost?
I was arrogant of what your memories could do when I decide to leave you..
Yes..
Your memories Anything can be done!!
It’s made me a living idol..
உன்னைப் பிரிய
முடிவெடுக்கும் போது
உன் நினைவுகள்
என்னை என்ன செய்து விட முடியும்
என்று இறுமாந்திருந்தேன் !!
உண்மைதான்..
உன் நினைவுகள் தான்
என்னை எதுவும் செய்ய விடுவதில்லையே !!
உண்ணாது, உறங்காது
சமைந்திருக்கிறேன்,
உருவச் சிலையாய்..
Hello Guys!
Please Don’t Disturb Me..
Because I am RICH Now,
I have my OWN Boyfriend..
You are
The Predictor of my Life,
and also
The Predator of my Life..
Nowadays
My tears love you more than my laughter..
It rushes to see you without asking me!
இப்போதெல்லாம் சிரிப்பை விட
என் அழுகைக்கு தான் உன் மீது
காதல் அதிகம் போல.. உன்னைப் பார்க்க ஓடோடி
வருகிறது என்னைக் கேளாமலேயே
I think there was a fuse effect
in the auricle of your heart and the ventricle of my heart,
due to the short circuit that occurred when our eyes met.
Then, why is my soul proud when others praise you?
உன் கண்களும், என் கண்களும் சந்தித்து SHORT CIRCUIT ஆனதின் விளைவு,
FUSE ஆகி ஒட்டிக்கொண்டதோ.. உன் இதயத்தின் ஆரிக்கிளும்,என் இதயத்தின் வென்ட்ரிக்கிளும்..
பின், உன்னை பாராட்டுகையில், என் உள்ளம் ஏன் பெருமிதப்படுகிறது?
My tutor complimented me, saying that I have a good presence of mind.
Yes ofcourse..
Because of your presence in my mind, I have a good presence of mind.
Please keep this secret only with us.
காதலித்தேன்..
என் வாழ்க்கை அழகானது..
உன்னைக் காதலித்தேன்..
என் அழகு கூடிப் போனது.
This is enough.
Don’t become beautiful day by day..
because in one day 365 poems appeared in my mind to write.
You may have petal like hands, but I only have pitiful hands.
இருக்கிற அழகே போதும்.
இனிமேலும் நாளுக்கு நாள் அழகாய் மாறாதே..
ஒரே நாளில் 365 கவிதைகள் என் மனதில் தோன்றி என்னை எழுதச் சொல்கின்றன..
பரிதாபத்திற்கு உரியவையல்லவா எனது கைகள்?
I want to practice duet dancing
before I meet you in person.
But, so sad..
There is no palm tree in my area.
Whenever I ask your permission to do something,
You tell me to follow My Heart.
That’s why I am asking YOU.
Because I want to follow MY HEART every minute.
I fell in love
and
my life became beautiful..
I fell in love with you
and
I became beautiful
உன்னை எப்போது சந்திப்போம்
என விரல் விட்டு எண்ணியே
என் விரல் தேவதைகள்
இளைத்துப் போனதில்
கழன்று விழ
ஆரம்பித்து விட்டன,
அதன் நகக் கிரீடங்கள்..
Are you my lover or a grocer?
You gave me love after taking my heart..
Why are you giving me tears additionally?
What is that coriander leaf, to give a tip?
நீ காதலனா? காய்கறிக் கடைகாரனா?
என் இதயத்தை வாங்கிக் கொண்டு
காதலைத் தந்தாய்..
கூடவே கண்ணீரையும் ஏன் தருகிறாய்?
அது என்ன கொத்தமல்லித் தழையா?
கொசுறாய் தருவதற்கு..
என்னுடன்
பேசாமல்
தவிக்கிறாயா?
இல்லை,
பேசுவதையே
தவிர்க்கிறாயா?
Without talking to me,
Are you suffering?
Or
Talking to me,
Are you shirking?
I am counting on my fingers
when I will meet you.
By this count
my angelic fingers are thinning
and their nail crowns are starting
to fall off.
உன் கழுத்து ஓர வியர்வையில்
ஒரு துளி போதும் – நான்
கரைந்தே அமிழ்ந்திட…
உன் அன்னை உன்னை அழகாய் பெற்றதோடு நிறுத்தி இருக்கலாம்..
பெயரையுமா இவ்வளவு அழகாய் சூட்டுவது?
உனது பெயர் பொறித்த காகிதமானாலும் சரி… கணினித் திரையானாலும் சரி…
வாசிக்க நேர்கையில் நேசிக்கவே ஆரம்பித்து விட்டேன்..
After the birth of a beautiful baby boy,
Maybe your mom stopped.
But she also gave you a beautiful name.
Be it a mobile screen Or on a computer screen,
my favorite reading is your name only…
ஒரு புறத்து இமையை
மூடித் திறந்தே,
ஒத்தடம் கொடுக்கிறாய்
என் கன்னச் சிவப்புக்கு..
By closing and opening of your one side eyelid,
You give fomentation For my reddish cheeks..
Blinking makes linking our hearts.
A drop of sweat
on your neck is
enough for me.
I would totally melt out…
உன் கைக்கடிகார
முட்கள் கூட
மன்மத அம்பாய் மாறி,
என் மனதைத்
துளைக்கிறதே…
Despite my warning You sent your photo to me..
Trapped your image Not only within my mobile screen..
Even within my eyes..
Forgive me,
Your beautiful lips are on the verge of danger now..
எச்சரித்தும் கேளாமல் அனுப்பி வைத்து விட்டாய் உன் புகைப்படத்தை..
சிக்கியது உன் உருவம் – என் கைபேசித் திரைக்குள் மட்டுமல்ல..
என் இதழ்களுக்குள்ளும் தான்..
மன்னித்து விடு, ஆபத்தின் விளிம்பில் உள்ளன, உன் அழகிய உதடுகள்..
I think you will get tired of my innumerable poems.
what to do?
Only by writing can I lose my pains and longings.
Let all my pain be
As poems!! As papers!!
கணக்கில்லாமல் கவிதைகளாய்
எழுதித் தொலையாதே
என்கிறாய்…
எழுதித் தான்
தொலைக்க வேண்டியிருக்கிறது,
என் வலிகளையும், ஏக்கங்களையும்..
கவிதைகளாய் !!
காகிதங்களாய் !!
Your wrist watch
Thorns (hands) too
became cupid’s arrow
and pierced my heart..
For anyone who hopes to find valuable information on that topic, right here is the perfect blog I would highly recommend.
Awesome posts by the way!