For Her

அடிக்கடி பெருமூச்சு விடாதே.

வாசனை திரவிய தயாரிப்பாளர்கள் உன் வீட்டு வாசலில் வந்து நிற்கப் போகிறார்கள்,

எப்படி கசக்காமல் பூக்களிலிருந்து வாசனை திரவியம் தயாரிப்பது என்ற ரகசியத்தை அறிந்து கொள்ள..

Don’t give me
flying kiss..

I prefer
to get it
from
“Natural Resource”

I always like to drink only hot beverages—hot coffee, hot badam kheer and this continues on for everything nowadays..

For example, I don’t want honey from honeycombs produced by bees..

I want to taste warm honey from the flower petals, that yield fresh honey.

Do you fulfill my wish, Baby?

Our hearts always feel joy when we see beautiful things.

If your presence brings me joy, then you are indeed quite attractive.

Please make me happy with your presence..

Always..As usual.

அழகானவற்றைப் பார்க்கும்போது நம் இதயம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.

உன் இருப்பு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது எனில், நீ உண்மையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறாய் என்றுதானே அர்த்தம்..

தயவு செய்து உன் இருப்பால், என்னை மகிழ்வி..

என்றென்றும்..எப்போதும்

Do not sigh often..

Perfumists around the world are going to come
to your doorstep to learn
the secret of how to make perfume from flowers

without crushing them.

The Aztecs consider GOLD to be “the sweat of the sun”.

According to the scientific human researcher, it is not true.

But as a specific romance searcher (in you), I’m starting to agree with the Aztecs these days.

ஆஸ்டெக் பழங்குடியினர்  தங்கத்தை “சூரியனின் வியர்வை” என்று கருதுகின்றனர்.

விஞ்ஞான மனித ஆய்வாளரின் கூற்றுப்படி, அது உண்மையல்ல.

ஆனால் உன்னுள் என் காதலை ஆராயும் இந்த நாட்களில் ஆஸ்டெக்குகளுடன் உடன்படத் தொடங்குகிறேன், நான்..

ஆம். தங்கமாய் உருமாறியிருக்கலாம், உன் வியர்வை துளிகள்..

God

made me

to be

mad

about you..

வரலாற்றில் இடம்பெறும் அமரத்துவ காதல் எல்லாம் சோக முடிவு கொண்ட கை கூடா காதல்தான்.

நம் காதல் வரலாற்றில் இடம் பெற வேண்டாம். வேண்டுமென்றால் அறிவியலில் இடம் பெறட்டும்.

நம்முடைய காதல் தான் கெமிஸ்ட்ரியில் நம்பர் ஒன் ஆயிற்றே.. நாம் இருவரும் Doctorates in Romanticology, ரைட்?

Somehow I got stuck in your Padma Vyuham.

Even though I know the way back like Arjuna, I wish to die like Abhimanyu.

Yes..I want your love enough to kill my life..

எப்படியோ உன் பத்ம வியூஹத்தில் மாட்டிக் கொண்டேன்.

நான் அர்ஜுனனைப் போல் திரும்பும் வழியை அறிந்திருந்தாலும், அபிமன்யுவைப் போல இறக்க விரும்புகிறேன்.

ஆம்..என் உயிரைக் கொல்லும் அளவுக்கு உன் காதல் வேண்டும் .

The moon is moving away from the planet at a rate of 3.8 cm every year, which is causing the earth’s rotating speed to slow down.

Would you like to go far away from me in order to verify the veracity of this news?

it’s true.  My heart rate fluctuates based on your distance.

Yes, baby. My life span depends on how far away you are.

நிலா வருடத்திற்கு 3.8 cm தொலைவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு செல்ல செல்ல பூமியின் சுற்றும் வேகம் குறைந்து கொண்டே வருகிறதாம்..

இதை சோதித்துப் பார்க்கவா என்னை விட்டு தள்ளி தள்ளி செல்கிறாய்?

என் உயிர்த்துடிப்பின் வேகம் உன் தொலைவைப் பொறுத்து அல்லவா கூடுவதும், குறைவதும்..

The immortal love in history is the love
that ended tragically always.

Our love doesn’t need
to go down in HISTORY..
Let it happen in SCIENCE.

Because there’s a lot of chemistry
going on between us, right?

I believe we will have a doctorate in
ROMANTICOLOGY, very soon.

The tips of my palm lines are fluttering in the air, and they want to be intertwined with your palm lines.

They may have found the soul of our love there. What is the use of longing now?

It would have been good to have your fingerprints imprinted on my fingertips when our fingers kissed passionately that day.

என் உள்ளங்கை ரேகைகளின் நுனி காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது, உன் கை வளைவுகளுக்குள் அடைந்து கொண்டு உன் உள்ளங்கை ரேகைகளுடன் பின்னிப் பிணைந்து நடனமாடிட..

நம் காதலின் ஆன்மாவை அங்கே தான் கண்டுபிடித்திருக்கும் போல.. இப்போது ஏங்கி என பயன்?

நம் கை விரல்களின் நுனிகள் அழுத்தமாய் முத்தமிட்ட சமயத்தில் உன் கை ரேகைகளை அச்செடுத்தாவது வந்திருக்கலாம்.

The Oxford English Dictionary estimates that there are around 170,000 words in current use in the English language.

What is the use of that so many words?

I can’t use a single word to caress you.

All your nicknames are looking at me longingly and asking when it would use by me.

உன்னிடமிருந்து என் மனதை ஒளித்து வைக்கத்தான் ஆசைப்படுகிறேன்.

என்னுள் இருக்கும் காதல் ஒரு தீக்குச்சி எனில் என்னால் மறைக்க முடிந்திருக்கும்.

காட்டுத் தீயை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் மரம் எனில் எப்படி என் காதல் சீற்றத்தை மறைத்து வைப்பேன்..

தெரிந்தே தான் ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கிறோம்,

விதி மறைந்து நின்று நம்மை பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது தெரியாமல்….

In the poem itself, I Love You so much…!
In real life how much shall I Love You.!!?

But The Time didn’t give relationship to exchange our garlands.

At least it gives us to exchange our hearts and get our Love relationship.

I didn’t bring anything with me when I was born..

But please know that
I will take your memories with My Love when I pass away.

Don’t wander around looking for a bouquet when I’m angry.

Stand in front of me for
a couple of minutes with a
smile on your face.

I’m sure I can’t be angry
at that time. Yes,it is against my nature to be angry with nature.

Because, It’s very difficult
to be angry at flowers
even for pretending.

What to do, honey?

You sheltered my abandoned heart..

Look now. It is greedy to inherit your entire love property and claim full rights..

If you feel burdened, leave that greedy heart ..let it wander in the street as an orphan again.

அனாதையாய் இருந்த என் இதயத்திற்கு அடைக்கலம் கொடுத்ததாய்..

இப்போது பார். உன் அன்பெனும் சொத்துக்கு ஏக போக வாரிசாகி முழு உரிமை கொண்டாட ஆசைப்படுகிறது..

விட்டு விடு உனக்கு பாரமெனில் ..அலைந்து திரியட்டும் வீதியில்.

I wish to keep
my feelings to myself.

I could have hidden
my love if it had been
a fire stick.

But, how can I hide
my love if it’s a tree that
keeps the wild fire within?

We are knowingly playing hide-and-seek without realizing that fate is
watching us with
a smile on its face.

அனல் காற்று பட்டாலே பூ வாடிப் போகுமாமே..

பின்பு எப்படி நான் உன்னை முத்தமிடுவேன்?

Google asked me..

I ought to set a password
that I will never forget…

Can I remember anything
other than you,
except your name,
even if my spirit is split?

“Password Updated
Successfully”..

கூகுள் என்னிடம் கேட்டது..

என்றுமே மறக்க முடியாத ஒரு வார்த்தையை பாஸ்வேர்ட் ஆக உபயோகிக்குமாறு..

உன்னைத் தவிர, உன் பெயரைத் தவிர வேறு எது என் ஆவி பிரிந்தாலும் என் நினைவில் தங்கி இருக்க முடியும்?

If you were a flower, I would be the root holding you up. If so were we made only to gaze?

Either I should decompose and emerge from the ground, or you must fall off the plant.

when the bloom and root are completely dried, only then they can kiss each other, right?

நீ மலர் எனில் உன்னைத் தாங்கும் வேர் நான்..

வெறுமனே பார்த்துக் கொண்டே இருக்கவா படைக்கப்பட்டோம் என்கிறாயா?

ஒன்று நீ செடியிலிருந்து கீழே விழ வேண்டும்.

அல்லது நான் மக்கிப் போய் மண்ணை விட்டு மேலே வர வேண்டும்.

மொத்தத்தில் வேரும், மலரும் சருகானால் தான் முத்தமிட முடியுமா?

A heated wind causes the petals of a flower to wilt..

After knowing that,

how can I give you a passionate kiss?

நாம் இருவரும் சந்திக்கும் சமயங்களில் உன் காலை மிதித்து விட்டால் நீ என் மீது கோபப்பட்டு விடாதே..

எனக்கும் நீல் ஆம்ஸ்ட்ராங் போல நிலவில் கால் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா, என்ன?

If someone has sugar, they should take certain measures before donating blood. If so, you are ineligible to give blood at any point in your life, right?

If sugar in the blood is the problem means, wouldn’t honey, which is flowing all over your body, create huge trouble for the receiver?

Do you understand that you hold a special place in my heart, my HONEY?

சுகர் இருந்தால் இரத்த தானம் செய்ய முடியாதாமே..

அப்படியெனில் நீ வாழ்நாள் முழுக்க ஒரு தடவை கூட இரத்த தானம் செய்ய முடியாதா?

நீ என்னுடைய தேன் அல்லவா?

இரத்தத்தில் சர்க்கரை இருந்தாலே பிரச்சனை எனில், உன் உடல் முழுக்க தேன் அல்லவா பாய்ந்து கொண்டிருக்கிறது?

The sight you left behind is still warm,
like the heat of the seat you sat on.

I have brought that shining light with me as
a gift you gave me.

Isn’t your vision the burning essence of
my heart, which you
have ignited?

நீ விட்டுச் சென்ற பார்வை, நீ அமர்ந்து சென்ற இருக்கையின் சூட்டினைப் போல் இன்னும் கத கதப்பாய் உள்ளது.

அந்த ஒளிரும் ஒளியை நீ வழங்கிய பரிசாக என்னுடனேயே எடுத்து வந்து விட்டேன்,

நீ பற்ற வைத்த என் இதயம் காலம் முழுவதற்கும் எரிவதற்கான சாரம் அல்லவா உன் பார்வை..

Please don’t be angry
with me if I trample
your foot when we meet.

Like Neil Armstrong,
I too want to set my foot
on the moon..

Please Baby…

I LOVE YOUr hair…

My goodness…

There is no tax
on salt in India.

Otherwise, the tax authorities would have charged me
a huge amount,

because of my tears.

 

நல்ல வேளை..

இந்தியாவில் உப்புக்கு வரி கிடையாது.

இல்லையெனில், என் கண்ணீரால்,

வரி அதிகாரிகள் என்னிடம் பெரும்

தொகையை வசூலித்திருப்பார்கள்.

நேரில் உன்னை பார்க்கும் சமயங்களில் உன் முகத்தில் தண்ணீரை ஊற்றினால் கோபப்பட்டு விடாதே..

என் பாட்டி சொல்லி இருக்கிறாள்..

பூக்களுக்கு அடிக்கடி தண்ணீர் தெளிக்க வேண்டும் என்று..

If the two lines
I wrote, hurt you..

then a word you didn’t
write also hurts me..

You have killed
my pet name
with my own name..

நான் எழுதிய இரு வரிகள் உனக்கு வலிக்கும் எனில்,

நீ எழுதாத ஒரு வார்த்தையும் எனக்கு வலிக்கிறதடி..

எனக்கான செல்லப் பெயரை, என் சொந்தப் பெயரை வைத்தே கொலை செய்து விட்டாய் நீ..

Please don’t visit the Spa of South India ..

Then I won’t let anyone to use that water.

Because obtaining the alchemical solution (Rasavaatha Dhravagam) of turning iron into gold is not good for common people.

தயவு செய்து குற்றால அருவிக்கு குளிக்க சென்று விடாதே..

பிறகு அந்த தண்ணீரை யாரையும் பயன்படுத்த விடமாட்டேன்.

ஏனெனில் இரும்பை பொன்னாக்கும் ரசவாத திராவகம், சாதாரண மக்களுக்கு கிடைப்பது நல்லதல்ல.

Please don’t get upset
if I splash water in your face,  when we meet in person.

According to my Granny,
flowers need to be
watered frequently.

தொடுதல் என்பது ஒரு கலை.

அது உன்னுள் இருக்கும் உயிரை எழுப்பி விடும். உள்ளுக்குள்ளேயே சிறகுகளை விரிக்க வைக்கும். வானத்தில் மிதக்க வைக்கும். நீரில் பறக்க வைக்கும்.

தேடலில் தொடங்கி தொலைவதில் முடியும் அக்கலையை உன்னை நீயே தொட்டுக் கொண்டு ஏன் உனது ஆற்றலை வீணடிக்கிறாய்?

பேனாவுக்கு மட்டும் அல்ல.. நாக்கிற்கும் நுனி உண்டு என்பதை மறக்காதே..

நீ பேனாவின் நுனியாக மாறி பேப்பரை தொட விரும்புகிறாயா? அல்லது ………?

I don’t like perfumes.

Now I’m scared to start a family with you.

Recently, I just came to know that perfumes are made of flowers.

I can’t stand the sweet smell of a half-foot-tall bottle of perfume

Then how can I live my life with the lovely scent of 5 feet of flower?

எனக்கு வாசனை திரவியங்கள் பிடிக்காது.

இப்போது உன்னுடன் குடும்பம் நடத்த எனக்கு பயமாக இருக்கிறது.

சமீபத்தில், வாசனை திரவியங்கள் பூக்களால் தயாரிக்கப்படுகின்றன என்பதை நான் அறிந்தேன்.

அரை அடி உயர வாசனை திரவிய பாட்டிலின் இனிமையான வாசனையை என்னால் தாங்க முடியவில்லை.

பிறகு எப்படி 5 அடி பூவின் அழகான வாசனையுடன் என் வாழ்க்கையை வாழ முடியும்?

There is a tree that blossoms
due to the touch of a woman..

When a woman’s fingers touch that
dead tree, its bark becomes
as soft as silk,
femininity flows into the bud,
and it blossoms in all its
branches in one night.

However, you can make me bloom
in an instant with just a glance
at me without even touching me.

So, I’m afraid if your finger
touches me, I’ll melt.
That’s why I protect myself by avoiding
seeing you in person.

பெண்ணின் ஸ்பரிசத்தால் மலரும் மரம் ஒன்று உண்டு..

பட்டுப் போய் நின்ற மரமும், பெண்ணின் விரல்கள் அதன் மீது பட்டவுடன் அதன் மரப்பட்டை கூட பட்டு போல் மென்மை ஆகி மொட்டுக்குள்ளும் பெண்மையுணர்வு பாய்ந்தோடி ஒரு இரவிலேயே மொத்த கிளைகளிலும் பூத்துக் குலுங்கும் அம்மரம் ஏழிலைப் பாலை.

உன் பார்வையிலேயே உன் ஆற்றலை என்னுள் கடத்தி என்னை ஒரு நொடியில் உருகிப் போக வைக்கிறாயே,

உன் விரல் பட்டால் நான் என்ன ஆவேனோ என்று பயந்துதான் என்னைப் பார்க்காமலேயே பாதுகாக்கிறாயோ?

 
 

Touching is an art.

It awakens the life within you. Spreads wings of soul inwards. Makes us float in the sky and fly in the water. Starts in search and ends in lost..

but why waste your energy by touching yourself, baby?

Don’t forget that not only the pen, the tongue also has a tip.

Are you going to be the tip of the pen touching the paper or ….?

Oh my moon,

I have marked all my failed attempts to tell you my love as stars in the sky.

Surely, it will touch you one day.

Because I will try my best to increase the stars.

ஓ என் நிலவே,

உன்னிடம் என் காதலை சொல்ல முயன்று தோல்வியைத் தழுவிய அத்தனை முயற்சிகளையும் வானத்தில் குறித்து வைத்திருக்கிறேன், நட்சத்திரங்களாய்..

விரைவில் ஒரு நாள் என் காதல் உன்னைத் தொட்டுவிடும்.

ஏனெனில் நான் முடிந்த அளவு முயற்சிக்கப் போகிறேன், நட்சத்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க..

Hey my moon,

It is hard for me to see you wandering around in the sky without a place to stay.

I have a 4BHK room that has not been occupied for a long time.

Can you come and stay permanently?

I keep the auricle windows and ventricle doors open for you. Come to me ASAP.

என் கவிதைகளுக்கு மட்டும் கால்கள் இருந்திருந்தால்,

எந்நேரமும் உன் வீட்டு காலிங்பெல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

I realize how much importance I have been giving you in my life, only on the days when I miss your presence.

How can I calm my mind when it has reached the verge of extreme despair in a single day?

உன்னைப் பாராத நாட்களில்தான் எனக்குப் புரிகிறது,

உனக்கு நான் எவ்வளவு முக்கியத்துவம் என் வாழ்க்கையில் கொடுத்து வந்து கொண்டிருக்கிறேன் என்பது..

ஒரே நாளில் உச்சகட்ட விரக்தியின் விளிம்பிற்கே சென்று விட்ட மனதை என் எவ்வாறு சமதானப்படுத்துவேன்?

உன்னை மனம் வாடச் செய்யும் நாள்களில் என்னை நானே வெறுக்கிறேன்.

பேசாமல் ஏதாவது ஒரு கண் காணாத தொலைதூர தேசத்தில்

என்னையே நான் விற்று விடட்டுமா?

Science says that whenever a halo appears around the moon, a storm will form on the earth.

It’s true, I know .

Whenever you smile brightly, my breath turns into a storm and always want to swirl around you.

Control that urge with the help of your eyebrow whip or

hug me tight with the help of your arm belt with the finger hook and start swirling with me.

If only my poems had legs,

the door bell of your house

would always be ringing.

I thought I was lost..

Now only I know that you have lost me.

Your memories are enough for the rest of my whole life.

what to do?

Still I have a few more years to live.

நான்தான் தொலைந்து போனேன் என்று நினைத்தேன்..

இப்போதுதான் புரிகிறது, நீதான் என்னைத் தொலைத்து விட்டாய் என்று..

இனி என் வாழ்வு முழுமைக்கும் உன் நினைவுகள் மட்டும் போதும்..

என்ன செய்ய?

இனியும் கொஞ்ச நாள்கள் உயிர் வாழ வேண்டியிருக்கிறதே?

I hate myself on days when I make you feel dull.

Will I lose myself in a far-off land where no one can see me?

காற்றில் பறக்க விடாதே எனக்கான உன் முத்தத்தை..

என் இதழ்களை வந்தடைய முடியாமல் வானத்திற்கு வண்ணமேற்றி கிடக்கிறது,

வானவில்லாய் மாறி..

I try to bury your memories deep in my heart.

But the loop of my eyeballs pulls up your illusion every moment.

I try to distract myself, to busy my mind, But in my brain, your memory is engraved.

Even in a coma, it won’t go away, I swear.

I’m afraid that I may go insane, because it’s so difficult not to think of you even though it’s bittersweet pain.

உன் நினைவுகளை என் இதயத்தில் புதைக்க முயற்சிக்கிறேன்.
ஆனால் என் கண்மணிகளின் வளையம் ஒவ்வொரு கணமும் உன் மாயையை மேலே இழுக்கிறது.

நான் என்னை திசை திருப்ப முயல்கிறேன்,  ஆனால் என் மூளையில் உன் நினைவு பொறிக்கப்பட்டுள்ளது.
கோமாவில் கூட அது போகாது, நான் சத்தியம் செய்கிறேன்.

நான் பைத்தியமாகிவிடுவேனோ என்று நான் பயப்படுகிறேன், ஏனென்றால் அது கசப்பான வேதனையாக இருந்தாலும் உன்னை நினைக்காமல் இருப்பது மிகவும் கடினம்.

You say that you will give lip kisses to my fingers that have written poetry.

Remember.. I am a good singer as well. 

Tell it to your lips.

Not to be partial in giving gifts.

கவிதை எழுதிய என் விரல்களுக்கு உன் இதழ் முத்தம் பரிசளிப்பதாகக் கூறுகிறாய்.

ஞாபகம் வைத்துக் கொள். எனக்குப் பாடவும் நன்கு வரும்.

எனவே சொல்லி வை உன் இதழ்களிடம். பரிசளிப்பதில் பாரபட்சம் காட்ட வேண்டாம் என்று.

Don’t give me flying kisses in the air.

All the kisses didn’t reach my lips.

Missed kisses go up in the sky and turn into rainbows.

Do not make the sky heavy, please!

I hope The Moon
doesn’t turn into The Sun,
out of anger.. Not an
Orange Moon, but a
Milky White one
is what I always Love.

I don’t know how to
Express my pain…
only I know
how much I miss
The Moon,
on new moon night.

How can you travel to and from any airport without a hitch?

I am afraid to accompany you.

I think that the officers of the Anti-Idol Smuggling Unit will arrest me if you are coming with me.

எப்படி எந்த ஒரு விமான நிலையத்திலும், எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நீ வந்து போகிறாய்?

உன்னுடன் வர எனக்கு பயமாய் உள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், உன்னுடன் வரும் என்னை கைது செய்து விடுவார்களோ என்று எண்ணி..

oh my moon, உன் இதயத்தை உன் முதுகுப் புறத்திலே வைத்து தைத்திருக்கிறாயா, என்ன?

என்னால் என்றுமே காண முடியாத far side ah உன் மனது?

தெரிந்தால் தானே புரிவதற்கு?

சரி, சரி.. கவிதை என்றாலே குழப்பத்தானே செய்யும்?

In the silence of the early morning,
My eyes want to hug your silhouette in longing.

With every move of your finger strike,
My soul takes flight.

Yearning to touch your silver light,
I want to break the sun light.

A romantic tune beats in my heart radio,
Does my body need extra cardio?

My heart is racing to meet you, Oh dear moon.
Let my yearning reach you soon..

அதிகாலையின் அமைதியில், ஏக்கத்தில் உன் நிழற்படத்தை அணைத்துக் கொள்ள என் கண்கள் விரும்புகின்றன.

என் இதய வானொலியில் ஒரு காதல் இசை இடைவிடாமல் துடிக்கிறது, இதை விட என் உடலுக்கு கூடுதல் கார்டியோ தேவையா?

உன் விரல் சுழலும் ஒவ்வொரு அசைவிலும், என் ஆன்மா பறக்கிறது.

உன் வெள்ளி ஒளியைத் தொட ஏங்குகிறேன், எனவே சூரிய ஒளியை உடைக்க விரும்புகிறேன்.

அன்பே சந்திரனே, உன்னைச் சந்திக்க என் இதயம் துடிக்கிறது. என் ஆசை விரைவில் உன்னை அடையட்டும்

If one day you get lost, I promise not to search for you..

Of course..

Maybe my ashes will wander in the air looking for you . .

But I will never search for you . .

Definitely.

ஒரு நாள் நீ தொலைந்து போய் விடுவாய் எனில் கண்டிப்பாக நான் தேட மாட்டேன்..

நிச்சயமாக..

என் சாம்பல் வேண்டுமானால் உன்னைத் தேடி காற்றில் அலைந்து உதிருமே தவிர நான் உன்னை என்றும் தேட மாட்டேன்..

Oh my moon, have you sewn your heart on your far side that I can never see your heart?

How can I understand if I couldn’t see?

Well, isn’t poetry always difficult to understand, right?

உலகம் முழுக்க எண் 1
அனைவருக்கும் ஒன்று தான்..

ஏன் நீ சொல்லும் போது மட்டும் ஒன்று, சிறப்பு ஒன்றாகிறது?

கண்களில் தான் போதையேற்றுகிறாய்
என்றால்
வார்த்தைகளிலுமா?

போதையில் தலை சுற்றி தள்ளாடி விழுகிறேன், மீண்டும் உன் பார்வையில்.. உன் வார்த்தையில்..

Beloved, I shall come to you soon.
Begin your breathing exercises right away.

Because ,
When our lips in passionate kisses meet,
Our feelings may be shared, but our breath will stand still.

My lips are eager to taste your own breathless kiss.
We’ll be one, in this embrace.

Our bodies and desires are in perfect sync.
So we will kiss and love without a second’s blink.


So practice now, my dearest heart.
Soon we’ll meet, never to part.

அன்பே, நான் விரைவில் உன்னிடம் வருவேன். உன் மூச்சுப் பயிற்சிகளை உடனே தொடங்கி விடு

ஏனெனில், உணர்ச்சிமிக்க முத்தங்களில் நம் உதடுகள் சந்திக்கும் போது, நம் உணர்வுகள் பகிரப்படலாம், ஆனால் நம் மூச்சு அப்படியே நிற்கும்.

என் உதடுகள் உனது மூச்சுவிடாத முத்தத்தை சுவைக்க ஆவலாக உள்ளன. இந்த அரவணைப்பில் நாம் ஒன்றாக இருப்போம்.

நமது உடலும் ஆசைகளும் சரியான ஒத்திசைவில் உள்ளன. அதனால் ஒரு நொடி கூட கண் சிமிட்டாமல் முத்தமிட்டு காதலிப்போம்.

எனவே இப்போது பயிற்சி செய், என் அன்பே, விரைவில் சந்திப்போம், எப்போதும் பிரிய மாட்டோம்.

Brahma, who created you, has sent a mail saying that he will take legal action against me.
He says I have infringed copyright by copying his own poem.

A poem can be copied as a poem itself, right?

May be,
Brahma was a skilled one who crafted you.
Your mother was a tallented one who abducted you from Brahma.
But only I am the lucky one to enjoy your beauty completely.

தனக்கு சொந்தமான கவிதையை
காப்பியடித்து காப்புரிமையை மீறி விட்டேனாம் நான்..
என் மேல் சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக
உன்னைப் படைத்த பிரம்மன் மெயில் அனுப்பியிருக்கிறார்..

உன்னைப் பார்த்து நான் கட்டுரையா எழுத முடியும்?
கவிதையை கவிதையாய் தானே நகலெடுக்க முடியும்?

உன்னை அழகாய் படைத்தவன் பிரம்மனாக இருக்கலாம்..
உன்னை அழகாய் பெற்றெடுத்தவள் உன் அன்னையாய் இருக்கலாம்..
ஆனால் அந்த அழகை அனுபவிக்க எனக்கு மட்டும் அல்லவோ அதிர்ஷ்டம் இருக்கிறது?

Worldwide, numeric 1 is one to everyone.

But why, only when you say ‘one’, it becomes the ‘special one’?

Already, you have intoxicated me with your gaze. Now by your words?

You make me stagger and fall into your heart again and again….

நான் ஒன்றை செய்ய வேண்டாம்
என்று சொன்னால் நீ இன்னும் அதிக முறை
அதை திரும்ப திரும்ப செய்கிறாய்..

என் வார்த்தையை நீ மீறினாலும்
எனக்கு கோபத்தை விட சந்தோஷம் தான் வருகிறது.
ஏன் தெரியுமா?

எதிர்காலத்தில் நான் முத்தம் வேண்டாம்
என்று சொல்லும் போதும் இப்படியே
உன் பிடிவாத குணத்தை காட்டுவாய் தானே..

Without seeing you, even loneliness has left me alone and strand.

On top of the globe, I stand alone and speed up the creeping steed of time,

With the help of a whip made of my twisted nerves..

உன்னைப் பார்க்காமல் தனிமை கூட என்னைத் தனிமைப்படுத்தி விட்டுச் சென்றுவிட்டது.

பூகோளத்தின் மேல், நான் தனியாக நின்று காலத்தின் ஊர்ந்து செல்லும் குதிரையை வேகப்படுத்துகிறேன்.

என் முறுக்கிய நரம்புகளால் செய்யப்பட்ட சாட்டையின் உதவியுடன்..

You have started my day like as a poem..

How can I make a more beautiful poem than that?

Every part of my internal organs became a photocopy of a heart to love you more.

My brain too.. It has started dying peacefully..

ஒரு கவிதையாகவே என் நாளை தொடங்கி வைத்து விட்டாய்..

அதை விட அழகான கவிதையை எப்படி நான் படைக்க முடியும்?

என் ஒவ்வொரு உள்ளுறுப்பும் உன்னைக் காதலிக்கும் இதயமாய் மாறியதில்

என் மூளையும் அமைதியாய் மரணிக்கத் தொடங்கி விட்டது..

If I tell you not to do something, you will do it again and again and that too many times.

Even if you break my word
I feel happier than angry.
Do you know why?

If I say no to kissing in the future, This is how you will show your stubbornness, right?

I need a lock that must always be sealed.

The key should be lost
and always out of sight.

It shall remain in the depths of secrecy, It should never be discovered.

One lock, No key, But my desire to be free
where hearts burn.

That lock is Lip Lock.

There are only two places in the world where Aparanji gold idols exist. One at Alaghar Temple! Another one is at Anantha Padmanapaswamy Temple!

You are also an Aparanji gold idol.
I agree.

For that, don’t mortgage out your conscience and ask some questions.
I don’t know whether to laugh or cry.

உலகில் இரண்டு இடங்களில் மட்டுமே அபரஞ்சி தங்க சிலைகள் உள்ளன. அழகர் கோயிலில் ஒன்று! இன்னொன்று அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்!

நீயும் ஒரு அபரஞ்சி தங்க சிலைதான்.நான் ஒப்புக்கொள்கிறேன்.

அதற்காக மனசாட்சியை அடகு வைத்து விட்டு சில கேள்விகள் கேட்காதே..

சிரிப்பதா, அழுவதா எனப் புரியவில்லை எனக்கு..

This world needs rain..
Even if you don’t want to talk, at least speak in sign language..

When both your lip petals rub together, the air particles get heated and try to burn themselves to attain moksha easily.

Only then can they reach the heavens to merge with the silver cloud to be reborn again as rain flowers that touch your feet.

Keep talking..
The world needs rain..

மழை வேண்டுமாம் இப்பூவுலகிற்கு..
நீ வாய் திறந்து பேசாவிடினும் மௌன மொழியிலாவது
பேசிவிடு..


உன் பூவிதழ்கள் இரண்டும் உரசுகையில் வெளிவரும் வெப்பத்தில் தான் காற்றுத் துகள்கள் தானே வலிய வந்து தீக்குளித்து
மோட்சம் அடைந்து பின் விண்ணுலகின்
வெண்மேகத்தில் சரணாகதி அடைந்து
மீண்டும் உன் பாதம் தொட
பொழிகின்றன மழைப்பூக்களாய் ..


பேசி விடு கொஞ்சம்..
மழை வேண்டுமாம் இப்பூவுலகிற்கு..

You are the sun in my solar system.
But I am one of the clouds in your sky. That too is a passing cloud.


You are the moon in my entire universe.
But I am one of the stars in your galaxy. It is also a shooting star.

Shot in the heart, now it’s (falling) down.

எமிலி டிக்கின்சன், ஜான் கீட்ஸ், வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்…

இவர்கள் வரிசையில் இனி உன் பெற்றோரின் பெயரும் இடம் பெற வேண்டும்.

இப்படி ஒரு அழகான கவிதைகள் இரண்டைப் பெற்றெடுத்து எனக்காய் அனுப்பியிருக்கிறார்களே!

எப்படி இரண்டு என்று நினைக்கிறாயா?

உன்னோடு உன் நிழலையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

உன் நிழல் உன்னைப் போல அழகாய் தானே இருக்கும்?

It doesn’t matter if you just tell me that you are leaving me for a few days.

But don’t tell it to my heart.
It’s okay if it cries, but it carves sad love poetry on its walls, like you are scribbling on paper.

How many crazy, sorry scribbles shall I endure?

நீ என்னை விட்டு சில நாள்கள் நீங்கி செல்வதை என்னிடம் சொன்னாலும் பரவாயில்லை,

என் இதயத்திடம் மட்டும் சொல்லி விடாதே.

அது கதறி அழுதாலும் பரவாயில்லை..தன் இதயச் சுவர்களில் காதல் சோகக் கவிதைகளாய் செதுக்கி வைத்து விடுகிறது..

நீ காகிதத்தில் கிறுக்குவது போல..

எத்தனை கிறுக்குகளை மன்னிக்க, கிறுக்கல்களை தாங்குவேன் நான்?

காகிதத்தில் தானே கவிதை எழுதினாய்?

பின் ஏன் என் இதயத்தை கசக்கி தூர எறிந்தாய்?

ஆமாம்..விழுந்து உடைந்தது என்னவோ என் இதயம் தான்..

ஆனால் என் இதயத்தில் குடிசை கட்டிய
நீ காயப்படுவாய் என்றுதான் நான் வேதனைப்படுகிறேன்.

You wrote a poem
on the paper itself, right?

Then why did you
crush my heart and
throw it away?

Yeah..My heart was
broken by falling.

But I am in pain that
you, who have built
a hut in my heart,
will be hurt.

Emily Dickinson, John Keats, and William Wordsworth…

In this list of poets, now your parent’s name should be included.

They gave birth to two such beautiful poems and sent them to me!

Are you thinking about how I mentioned two?
I’m telling about you and your shadow..

Your shadow should be as beautiful as you, isn’t it?

நான் ஒரு நல்ல

மொழிபெயர்ப்பாளனும்

கூட..

ஆம்,

நான் என் காதலை

கவிதைகளாக

மொழிபெயர்க்கிறேன்.

மொத்த அழகும் உன் முகத்தில் குடியிருக்க,


எந்த அழகை என்னிடமிருந்து மறைக்கிறாய்
நீ உடை மாற்றும்போது?


சரிதான். இப்போது நான் உடன்படுகிறேன்..


“உலகில் உள்ள சிறந்த மற்றும் அழகான விஷயங்களைப் பார்க்க முடியாது”
என்று சொன்ன ஹெலன் கெல்லருடன்..

All beauty lies in your face.

So which beauty do you hide from me when you change clothes?

Okay. Now I agree with Ms. Helen Keller, who said,

“The best and most beautiful things in the world cannot be seen.”

Science says that not even a drop of water rests on a lotus petal.

But how can henna leave stains on your hands?

I think henna leaf loves you.

That red color might be her tears, which don’t want to leave your hand..

Chemistry (of love) surpasses Botany?

தாமரை மலரில் ஒரு சொட்டு நீர் கூட தங்காது என்கிறது அறிவியல்.

ஆனால் தாமரை இதழ்கள் போல் இருக்கும் உன் கைகளில் மருதாணி எப்படி தன் கறையை விட்டுச் சென்றது?

ஒருவேளை அந்தக்கறை, உன்னை விட்டுப் பிரிய மனமில்லாதமருதாணி இலையின் கண்ணீர்க் கறையோ?

தாவரவியலை மிஞ்சும் வேதியியல்?

I am a good translator, too.

Yes..

I translate my love into poems.

You say that you can teach tricks to suppress the emotions.

When you stand before my eyes dressed in colorful clothes,

how can my mind sit meekly like Gautama Buddha?

you are the one who is triggering my emotions, as well as teaching tricks to suppress my emotions.

Even Poems written on paper ,
Sometimes we can’t understand..


In this you draw poetry in the air..
Rather than enjoying your unintelligible & invisible air poetry,


I enjoy your visible beauty.. Yes..
It was a pleasant experience..

சில சமயங்களில் காகிதத்தில் எழுதுகிற கவிதையையே புரிந்து கொள்ள இயலவில்லை..

இதில் காற்றில் கவிதையாய் வரைந்து தள்ளுகிறாய்..

காற்றில் கலந்த உ ன் புரியாத கவிதையை ரசிப்பதை விட

என் உயிரில் கலந்த உன் அழகை ரசிப்பதே சுகானுபவமாய் இருக்கிறது..

I would have cried if I had seen the live about Neil Armstrong touch the moon during the moon landing.

Fortunately I was never born then..

Now if I see someone touching you, I could not control my tears.

The last drop of my blood will decide the day my tears stop?

Nowadays I kindly invite all mosquitoes to my house.

Do you know why?

Somehow I wish a drop of your blood to kiss my veins..

இப்போதெல்லாம் எல்லா கொசுக்களையும் என் வீட்டுக்கு மனதார அழைக்கின்றேன்.

ஏன் தெரியுமா?

உன் ஒரு துளி குருதியாவது என் நரம்புகளை முத்தமிடட்டும் என்று தான்.

என் இதயம் உன்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது என்று எனக்கு தெரியும்..

பிறகு நான் ஏன் அதை சோதிக்க வேண்டும்?

அதனால்தான் உன்னை  நேரில் பார்க்க வருவதில்லை.

Yes, I’m crazy on you by heart..

For that, can I keep smiling for hours and hours when looking at you?

I am crazy in love only, not in life.

ஆம், நான் உன் மேல் பைத்தியமாய் தான் இருக்கிறேன்..

அதற்காக மணிக்கணக்காய்  உன்னைப் பார்த்து சிரித்துக்  கொண்டேயிருக்க

நான் பைத்தியமா என்ன?

 

உனக்குத் தெரியும்    நான் உனக்குத் தான் செய்தி பரிமாறுகிறேன் என்று..

ஆனால், நீ யாருக்கு செய்தி பரிமாறுகிறாய் என்று யாருக்குத் தெரியும்?

My Love,

I want your love for the rest of my life. So, Let’s be lovers forever.

Only then will we be in love till the end.. If we get married, We’ll just become ‘Roommates’.

I know my heart is safe with you..

So why should I test it?

That’s why I don’t come to see you in person.

யோசித்து யோசித்து
பார்க்கிறேன் – என்னிடம்
என்ன திறமை உள்ளது,


உன்னை உருகி உருகி
காதலிப்பதைத் தவிர?

I am thinking deeply about what my talent is..

What else is there?

Except loving you so much with a melting heart..

You know I am conveying message to you.

Who knows who you are conveying message to?

மில்லி கிராம் அளவில்
காதலைத் தந்து விட்டு,

மெட்ரிக் டன் அளவில்
வலியைத் தருகிறாய்..

Whenever you are in front of me,
My appetite for love is gradually increasing. 

The sight of you is enough for my eyes to feast.

Next, fill in the lips, please. It can’t stand hunger for long.

நீ என் முன்னே இருக்கும் போதெல்லாம்,
என் காதலின் பசி எக்குத்தப்பாக எகிறுகிறது.

உன் பார்வையே போதும், என் கண்களுக்கு விருந்தளிக்க.

அடுத்து உதடுகளை பசியாற்றவும். பாவம், அது பசி தாங்காது.

Because of you I have a lot of head weight..

In every one of my brain cells
All are fragments of your image,
Like a Picasso’s painting
It is copying and mirroring you.

You are already overweight.
Don’t add some more weight. Because I am already a Head-weighted one!

தலைக் கனமாம் எனக்கு !
உண்மைதான்…உன்னால்தான்..

என் ஒவ்வொரு மூளை அணுக்களிலும்
முழுதாய் உன் உருவத் துணுக்குகள்,
பிக்காசோவின் கை வண்ணமாய்
உன்னை நகலெடுத்து பிரதிபலிக்கிறது…

இதுவே போதும், இன்னும் கொஞ்சம்
எடை கூடி – என் தலைக்கனத்தை
ஏற்றி விடாதே !!

In milligram size
You gave me love then,

In metric ton size
You give me pain now.

I am the one and only Eye-hard fan of you..

Because,

I only understand the steps of your iris dance

 

நம்ப முடியவில்லை..
நிலவு புவியிடமிருந்து 384,400 km
தூரத்தில் உள்ளதாம்..
ஆனால் என் கண் வளையத்துக்குள்
காண முடிகிறதே தினமும்..

நம்ப முடியவில்லை..
என்னிடமிருந்து சில கிலோ மீட்டர்
தொலைவில் தான் நீ இருக்கிறாய்..
ஆனால் உன்னைப் பார்க்க முடியவில்லையே..

எங்கேயோ இருக்கும் நிலவைப் பார்க்க முடிந்த என்னால்
இங்கேயே இருக்கும் உன்னைப் பார்க்க முடியவில்லை.

I Can’t believe it..
Moon is 384,400 km far away from Earth
But within my eye sight,     It can be seen everyday..


I Can’t believe it..
A few kilometers only,    you are away from me.. But I can’t see you..


I could see the moon which is somewhere..


I can’t see you who is here..

You say drinking is a crime..

Then why do you carry Tequila on your lips

and

Cocktail  In your eyes?

குடிப்பது குற்றம் என்று கூறுகிறாய்..

பின் ஏன் உதட்டில் கள்ளையும்

கண் குவளைகளில் காக்டெயிலையும்

ஏந்திக்கொண்டு திரிகின்றாய்?

உன் கண்களின்

கருவிழி நடனத்துக்கு

நான் மட்டுமே

ஒற்றை ரசிகன்..

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்கிறார்கள்..

ஆகவே தான் கலந்து விடத் துடிக்கிறேன்,

உப்புக் கரிக்கும் கடல் நீராகிய உன்னோடு…

உள்ளம் இனிக்கும் மழை நீராகிய நான்..

I don’t mind

Loving you.. 

 

My problem is

Loving you

So much..

உன்னை பிடித்துப் போனது

பிரச்சனை இல்லை..

 

மிகவும் பிடித்துப்

போனது தான்

பிரச்சனை எனக்கு..

வளர்ந்த பின் தான்காதல் வருமாம்..

யார் சொன்னது?

உன்னைக் காதலித்த பின் நான் குழந்தையாய் மாறிப் போனேன்..

குடியேறியது துள்ளலும், எள்ளலும்..  என் வாலிப வயதுக்குள் !!

Who said that Only after adulthood  we can feel Love..

After loving you, my Age has decreased and I became a kid..

Kidding (you) and Bouncing (me) have entered now..

Yes, I can feel it in my childhood itself !!

Unsalted food will be in the trash, The world says..

So I am looking forward to join with you..

The salty sea water, you are…

The sweety rain water,  i am…

What a ideal balance! Krack  jack..

29 Comments on “For Her

  1. I have been surfing online more than three hours today,
    yet I never found any interesting article like yours.
    It’s pretty worth enough for me. Personally, if all site owners and
    bloggers made good content as you did, the internet will be much more useful than ever before.

    • Hi, Thank you very much for your valuable comment. I took it as a word of encouragement rather than a compliment. I will try my best to make your words true.Thanks once again.

  2. I think this is among the most important info
    for me. And i am glad reading your article. But should remark on some general
    things, The website style is great, the articles
    is really nice : D. Good job, cheers

  3. You actually make it seem so easy with your presentation but I find this topic to be really something which I think I would never understand.
    It seems too complex and very broad for me. I am looking forward for your next post, I will try to get the hang of it!

  4. Thanks for your personal marvelous posting! I certainly enjoyed reading
    it, you might be a great author. I will make certain to bookmark your blog and may come back very soon. I want to encourage you to definitely continue your great job,
    have a nice day!

    • Your love and support have been a true blessing for me. My heart is full of gratitude for your comment, and really, it’s a beautiful gift. Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*